தினேஷ் கார்த்திக்கா? ரிஷப் பண்டா? அணியில் யார் இருக்க வேண்டும் என கூறிய ஜாம்பவான்
தினேஷ் கார்த்திக் 51 போட்டிகளில் 598 ஓட்டங்களுடன், 139 ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டுள்ளார்
ரிஷப் பண்ட் 58 போட்டிகளில் 934 ஓட்டங்களுடன், 126.39 ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டுள்ளார்
இந்திய அணியின் விக்கெட் கீப்பராக யார் இடம்பெறுவது என்ற கேள்விக்கு அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் பதிலளித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் இடம்பெற்றுள்ளனர். முதல் போட்டியில் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். ஆனால் அவர் 6 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இன்று நடக்க உள்ள இரண்டாவது போட்டியில் விக்கெட் கீப்பராக யார் களமிறங்குவார் என்ற கேள்வி நிலவுகிறது. இதேபோல் உலகக் கோப்பை அணியில் இருவரில் யார் இடம்பெறுவார் என்ற சந்தேகமும் ரசிகர்கள் இடையிலும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் விக்கெட் கீப்பிங்கில் ஜாம்பவானாக விளங்கிய அவுஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்தார். அவர் கூறுகையில், 'ரிஷப் பண்ட் கட்டாயம் இந்திய அணியின் வரிசையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
அவரது தைரியம் மற்றும் அவர் பந்துவீச்சை எதிர்கொள்ளும் விதம் சிறப்பாக இருப்பதால், கண்டிப்பாக அவர் அணியில் இருக்க வேண்டும் என நினைக்கிறன். அவர்களால் ஒன்றாக விளையாட முடியும். இருவரும் ஒரே அணியில் விளையாட முடிந்தால் அது சுவாரசியமாக இருக்கும்.
தினேஷ் கார்த்திக்கின் பன்முகத் திறமை, அவர் தொடக்க நிலையில் விளையாட விளையாடுவார். அவர் தனது கிரிக்கெட் வாழ்வில் மிடில் மற்றும் கடைசி கட்டத்தில் ஆட்டத்தை முடித்து வைக்கும் வகையில் தன்னை மாற்றிக் கொண்டார். அவர் சிறப்பான ஆட்டத்தை கொண்டிருக்கிறார்' என தெரிவித்துள்ளார்.
IANS
அவுஸ்திரேலிய அணியின் தூணாக விளங்கிய கில்கிறிஸ்ட் ஒருநாள் போட்டிகளில் 417 கேட்ச்களையும், டெஸ்ட் போட்டிகளில் 379 கேட்சுகளையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.