427 ஒட்ட இலக்கிற்கு எதிராக வெறும் 2 ஓட்டங்களில் சுருண்ட ஆடம் கில்கிறிஸ்ட்டின் முன்னாள் அணி
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மிடில் செக்ஸ் கவுண்டி லீக்கில், வடக்கு லண்டன் சிசியின் 3வது லெவன் அணி மற்றும் ரிச்மண்ட் சிசியின் 4வது லெவன் அணி மோதியது.
2 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்
இதில் முதலில் துடுப்பாட்டம் ஆடிய வடக்கு லண்டன் அணி, 45 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 426 ஓட்டங்கள் எடுத்தது.
இதில் 63 வைடுகள் உட்பட 92 ஓட்டங்களை ரிச்மண்ட் அணி பந்துவீச்சாளர்கள் வாரி வழங்கியுள்ளனர்.
427 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கிகளமிறங்கிய ரிச்மண்ட் அணி, 5.4 ஓவர்கள் முடிவில், வெறும் 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்த 2 ஓட்டங்களில் ஒரு ஓட்டம் வைடு பந்து வீசியதன் மூலம் கிடைத்துள்ளது. இதில் 8 வீரர்கள் ஒரு ஓட்டம் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
Unbelievable scenes pic.twitter.com/4Axnfa9dLI
— Tom Woodfield (@trwoodfield) May 25, 2025
இதன் மூலம் வடக்கு லண்டன் அணி, 425 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆடம் கில்கிறிஸ்ட்டின் முன்னாள் அணி
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக வலம் வந்த ஆடம் கில்கிறிஸ்ட், தேசிய அணியில் இடம் பெரும் முன்னர் ரிச்மண்ட் அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.
"முதல் அணி வீரர்கள் பலர் இடம் பெற முடியாமல் போனதால், அணி நிர்வாகம் வழக்கமாக கிரிக்கெட் விளையாடாத வீரர்களை விளையாட கட்டாயப்படுத்தியதன் விளைவாக இந்த பரிதாபகரமான ஸ்கோர்கார்டு உருவானது" என ரிச்மண்ட் அணியின் தலைவர் ஸ்டீவ் டீக்கின் தெரிவித்துள்ளார்.
குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்த இந்த கிரிக்கெட் அணியை, கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |