சரவெடி காட்டிய ஷார்ட்: மண்ணை கவ்விய மொயீன் அலி அணி
டி20 பிளாஸ்ட் போட்டியில் க்ளோஸ்செஸ்டர்ஷிரே அணி 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் யார்க்ஷிரேவை வீழ்த்தியது.
டி ஆர்க்கி ஷார்ட் விளாசல்
க்ளோஸ்செஸ்டர்ஷிரே மற்றும் யார்க்ஷிரே அணிகளுக்கு இடையிலான டி20 பிளாஸ்ட் போட்டி லீட்ஸில் நடந்தது.
முதலில் ஆடிய க்ளோஸ்செஸ்டர்ஷிரே அணியில் ஜோ பிலிப்ஸ் 25 பந்துகளில் 42 ஓட்டங்கள் விளாசினார்.
அரைசதம் அடித்த டி ஆர்க்கி ஷார்ட் (D Arcy Short) 50 பந்துகளில் 82 ஓட்டங்கள் (5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள்) குவித்தார்.
அணித்தலைவர் ஜேக் டெய்லர் 10 பந்துகளில் 20 ஓட்டங்கள் விளாச, க்ளோஸ்செஸ்டர்ஷிரே அணி 217 ஓட்டங்கள் குவித்தது.
ஹசன் அலி 3 விக்கெட்டுகளும், ஆண்ட்ரு டை 2 விக்கெட்டுகளும், மொயீன் அலி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
ஆடம் லித் சரவெடி
பின்னர் ஆடிய யார்க்ஷிரே அணியில் ஜானி பேர்ஸ்டோவ் 4 ஓட்டங்களில் வெளியேற, லக்ஸ்டன் 20 (12) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நட்சத்திர வீரர் மொயீன் அலி 15 பந்துகளில் ஒரு சிக்ஸருடன் 15 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
அதனைத் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிய, மறுபுறம் ஆடம் லித் அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார்.
தவறிய சதம்
எனினும், ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் அவுட் ஆனதால், யார்க்ஷிரே 17.4 ஓவர்களில் 161 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
கடைசி விக்கெட்டாக அவுட்டான ஆடம் லித் (Adam Lyth), 56 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 97 ஓட்டங்கள் குவித்து சதத்தை தவறவிட்டார்.
அபாரமாக பந்துவீசிய டி ஆர்க்கி ஷார்ட் 4 விக்கெட்டுகளும், ஜென்சென் 3 விக்கெட்டுகளும், ஒலிவர் ப்ரிஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |