இலங்கைக்கு எதிரான போட்டியில் விலகும் முக்கிய வீரர்? அவுஸ்திரேலியாவுக்கு பெரும் பின்னடைவு
கொரோனா தொற்று அறிகுறியால் ஆடம் ஜம்பா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
ஒருவேளை ஜம்பா விளையாடவில்லை என்றால் அவுஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்
அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பாவுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதும் பெர்த்தில் இன்று நடக்கிறது. இந்த நிலையில் அவுஸ்திரேலிய முக்கிய வீரரான ஆடம் ஜம்பாவுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஜம்பா சமீபத்தில் நேர்மறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு திரும்பியதை அணியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
AP Photo
ஆனால் லேசான அறிகுறிகளுடனேயே ஜம்பா காணப்படுவதாக கூறப்படுகிறது. ஐசிசி மற்றும் தேசிய அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட தற்போதைய விதிமுறைகளின்படி, கொரோனா தொற்று வீரர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
இருப்பினும் இன்றைய போட்டியில் ஜம்பா களமிறங்காத பட்சத்தில் ஆஷ்டன் அகர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆடம் ஜம்பா ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Getty Images