கடற்படைக்கு என இந்தியாவின் முதல் sonobuoy அமைப்பை உருவாக்கும் அதானி நிறுவனம்
அதானி குழுமத்தின் அதானி பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனமானது அமெரிக்காவின் Sparton நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முதல் sonobuoy அமைப்பை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர்மயமாக்குவதில்
இந்திய மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கான சிக்கலான மின்னணு அமைப்புகள் மற்றும் மேம்பட்ட ASW தீர்வுகளை உள்ளூர்மயமாக்குவதில் இது ஒரு குறிப்பிடத்தக்க படியாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் Sparton நிறுவனமானது உலக அளவில் மேம்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு போர் (ASW) அமைப்புகளை உருவாக்குவதில் முதன்மையான நிறுவனங்களில் ஒன்று.
இந்த ஒத்துழைப்பால், அதானி நிறுவனம், உள்நாட்டு sonobuoy தீர்வுகளை வழங்கும் இந்தியாவின் முதல் தனியார் துறை நிறுவனமாக மாறுகிறது. அதிகரித்து வரும் நிலையற்ற கடல்சார் சூழலில், இந்தியாவின் கடலுக்கடியிலான போர் திறன்களை வலுப்படுத்துவது ஒரு கட்டாய முன்னுரிமை மட்டுமல்ல,
நிலைத்தன்மையில்
இறையாண்மை மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான கட்டாயமாகும் என அதானி எண்டர்பிரைசஸின் துணைத் தலைவர் ஜீத் அதானி தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டாணி, Sparton நிறுவனத்தின் முதன்மையான ASW தொழில்நுட்பத்தையும், இந்திய கடற்படைக்கான மேம்பாடு, உற்பத்தி மற்றும் நிலைத்தன்மையில் அதானி டிஃபென்ஸின் நிறுவப்பட்ட நிபுணத்துவத்தையும் இணைக்கும்.
மேம்படுத்தப்பட்ட sonobuoy அமைப்பானது நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பிற நீருக்கடியில் அச்சுறுத்தல்களைக் கண்டறிதல், அடையாளப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பதற்கான ஒரு பயனுள்ள வழிமுறையை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |