டிக்டொக் நிறுவனரிடம் ஆசிய பணக்காரர் அந்தஸத்தை இழந்த அதானி
adani loses asia richest title to zhang yiming: கௌதம் அதானி ஆசிய பணக்காரர் அந்தஸத்தை இழந்து 2வது இடத்திற்கு சென்றுள்ளார்.
ஆசிய பணக்காரர் அந்தஸதை இழந்த அதானி
இந்தியாவை சேர்ந்த அதானி குழும தலைவர் கௌதம் அதானி, ஆசிய பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.

தற்போது டிக்டொக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸின் நிறுவனர் ஜாங் யிமிங், ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரராக உருவெடுத்துள்ளார்.
43 வயதான ஜாங் யிமிங், ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி 105 பில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

மார்ச் 2019 ஆம் ஆண்டில் 13 பில்லியன் டொலராக இருந்த, அவரது செல்வம் 8 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் 40.3 பில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளார்.
கௌதம் அதானி இந்த ஆண்டு 24.8 பில்லியன் டொலர்களைச் சேர்த்திருந்தபோதிலும், 105 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 81.3 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் ஆசிய பணக்காரர் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.
எலான் மஸ்க் 892 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
295 பில்லியன் டொலருடனும் லாரி பேஜ் 2வது இடத்திலும், செர்ஜி பிரின் 274 பில்லியன் டொலருடனும் 3வது இடத்திலும் உள்ளனர்.