பணக்காரர் பட்டியலில் அம்பானியை முந்திய அதானி - சொத்துமதிப்பு என்ன?
ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் அம்பானியை முந்தி அதானி முதலிடம் பிடித்துள்ளார்.
அம்பானியை முந்திய அதானி
ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் நீண்ட காலமாக முதலிடம் வகித்து வந்தார் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி.
தற்போது ப்ளூம்பெர்க் நிறுவன தரவரிசைப்படி, அம்பானியை முந்தி ஆசியாவின் முதல் பணக்காரர் என்ற பெருமையை அதானி பெற்றுள்ளார்.

தற்போது, 92.6 பில்லியன் டொலர்களுடன் (இந்திய மதிப்பில் ரூ.8.59 லட்சம் கோடி) அதானி குழும தலைவர் கௌதம் அதானி ஆசியாவின் முதல் பணக்காரர் மற்றும் உலகளவில் 19வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்த ஆண்டில் அவரது சொத்துமதிப்பு 8.10 பில்லியன் டொலர்கள் அதிகரித்துள்ளது.
இதே போல், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் 16.9 பில்லியன் டொலர்கள் குறைந்து, 90.8 பில்லியன் டொலர்களுடன்(இந்திய மதிப்பில் ரூ.8.42 லட்சம் கோடி) ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் 2வது இடத்திற்கு இறங்கியுள்ளார்.

உலகப்பணக்காரர் பட்டியலில் 19வது இடத்தில் இருந்து 20வது இடத்திற்கு சென்றுள்ளார்.

தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட HCL நிறுவனர் ஷிவ் நாடார், 33.5 பில்லியன் டொலர்களுடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 70வது இடத்தில் உள்ளார்.
முதலிடத்தில் எலான் மஸ்க்
உலகப்பணக்காரர் பட்டியலில் முதல் 20 இடங்களில், அதிகபட்சமாக பிரான்ஸை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் 44 பில்லியன் டொலர்களை இழந்து, 164 பில்லியன் டொலர்களுடன் 9வது இடத்தில் உள்ளார்.

இந்த ஆண்டில் 36.7 பில்லியன் டொலர்கள் அதிகரித்து, 656 பில்லியன் டொலர்களுடன், எலான் மஸ்க் முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.
இந்த ஆண்டில் 17.2 பில்லியன் டொலர்கள் அதிகரித்து, 286 பில்லியன் டொலர்களுடன், கூகிள் இணை நிறுவனர் லாரி பேட்ஜ் 2வது இடத்தில் உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |