ரூ 3,000 கோடி... அம்பானி நிறுவனம் ஒன்றை கைப்பற்ற திட்டமிடும் கௌதம் அதானி
இந்தியாவில் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான கௌதம் அதானி கடனில் மூழ்கி தத்தளிக்கும் அனில் அம்பானியின் நிறுவனம் ஒன்றை கைப்பற்ற திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதானி குழுமம்
குஜராத் மாநிலத்தை சேர்ந்த அதானி குழுமம் இந்தியாவில் பல மாகாணங்களில் அமைந்துள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றில் பெருமளவு முதலீடு செய்துள்ளது.
அதானியின் Adani Power என்ற நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் ரூ 269,000 கோடிகள் என்றே கூறப்படுகிறது. தற்போது இந்த நிறுவனம் அனில் அம்பானியின் Butibori Thermal Power Plant என்ற நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
ரூ 2400 முதல் ரூ 3000 கோடியில் இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வரலாம் என்றே கூறுகின்றனர். அதானி குழுமம் ஏற்கனவே இந்த திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனில் அம்பானியின் Reliance Power என்ற நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வந்த இந்த அனல் மின் நிலையம், ஒருகட்டத்தில் கடனில் மூழ்கி தத்தளித்த அம்பானியால் கைவிடப்பட்டு, தற்போது Vidarbha Industries என்ற நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
அனில் அம்பானியின் அனல்மின் நிலையம்
இந்த அனல்மின் நிலையத்தில் இருந்து 600 MW மின்சாரம் தயாரிக்க முடியும். அதானி குழுமம் அனில் அம்பானியின் அனல்மின் நிலையத்தை வாங்க முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து Reliance Power நிறுவனத்தின் பங்குகள் 5 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளது.
தற்போது அதானி குழுமம் வாங்க திட்டமிட்டுள்ள அனல்மின் நிலையத்தின் மதிப்பு ரூ 6,000 கோடி என்றே கூறப்படுகிறது. அதாவது விதர்பா அனல்மின் நிலையம் மற்றும் புட்டிபோரி அனல்மின் நிலையம் ஆகிய இரண்டும் தற்போது ஒன்றாகவே செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |