பேராசிரியராக வேலை பார்த்தவர்... அதானியின் பால்யகால நண்பர்: தற்போது 10 நிறுவனங்களின் நிர்வாகி
ஆசியாவில் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான கெளதம் அதானியின் பால்யகால நண்பர் தற்போது, அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார்.
அதானியின் வலக்கரம்
இந்தியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வரரான கெளதம் அதானியின் வலக்கரம் அல்லது நிழல் என அறியப்படுபவர் Malay Mahadevia. அதானி குழுமத்தில் இணைவதற்கு முன்பு அகமதாபாத்தில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார்.
1992ல் அதானி குழுமத்தில் இணைந்த இவர், முந்த்ரா துறைமுகத்தை கருத்துருவாக்கம் முதல் மேம்படுத்துவதில் பணியாற்றியுள்ளார். பம்பாய் பல்கலைக்கழகத்தில் பல் அறுவை சிகிச்சையில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர் மகாதேவியா.
அதானி குழுமத்தில் இணைந்த பின்னர், இந்தியாவில் செயல்படும் முதன்மை அமைப்புகளான CEPT, FICCI, ASSOCHAM, CII மற்றும் GCCI ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார்.
மட்டுமின்றி, அதானி குழுமத்தில் APSEZ நிறுவனத்தில் இயக்குனராகவும், AAHL நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார். அதானி குழுமத்தில் உள்ள 10 பிரதான நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு என்பது ரூ 1600000 கோடி.
உறுதியான தகவல் இல்லை
இந்த 10 நிறுவனங்களின் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார் மகாதேவியா. கடைசியாக வெளியான தரவுகளின் அடிப்படையில், 2016ல் ஆண்டு சம்பளமாக மாகாதேவியா ரூ 10.7 கோடி பெற்றுள்ளார்.
கெளதம் அதானியின் நிழல் என அறியப்படுவதால், இவரது தற்போதை சொத்துமதிப்பு தொடர்பிலும், சம்பளம் குறித்தும் உறுதியான தகவல் இல்லை என்றே கூறப்படுகிறது.
இந்தியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வரரான கெளதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு என்பது ரூ 677,520 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |