அதானியால் வெறும் 9 மாதங்களில் ரூ 17,000 கோடி சம்பாதித்த நிறுவனம்: அதன் தலைவரின் சொத்து மதிப்பு
உலகெங்கிலும் உள்ள பல முதலீட்டாளர்கள் ராஜீவ் ஜெயின் போல தங்கள் வர்த்தகத்தை சரியான நேரத்தில் செய்திருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
வெறும் 9 மாதத்தில்
GQG Partners என்ற நிறுவனத்தின் தலைவரும் தலைமை முதலீட்டு அதிகாரியுமான ராஜீவ் ஜெயின் வெறும் 9 மாதத்தில் அதானி குழுமத்தின் பங்குகளால் கோடிகளை சம்பாதித்துள்ளார்.
Photo: Bloomberg
ஒராண்டுக்கும் குறைவான காலகட்டத்தில் GQG Partners நிறுவனம் அதானி குழுமத்தின் பங்குகளில் தங்கள் முதலீடுகளை இருமடங்காக அதிகரித்துள்ளது. அதாவது ரூ 39,331 கோடி அளவுக்கு அதானி குழுமத்தில் ராஜீவ் ஜெயின் சார்ந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
இதனால் ரூ 17,000 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளது GQG Partners நிறுவனம். Adani Enterprises நிறுவனத்தில் சுமார் ரூ 3403 கோடியை முதலீடு செய்துள்ளார் ராஜீவ் ஜெயின். தற்போது அதன் மதிப்பு ரூ 9,024 கோடி.
சொத்து மதிப்பு 3.2 பில்லியன் டொலர்
Adani Green Energy நிறுவனத்தில் ரூ 4,743 கோடி முதலீடு செய்ததில், அதன் மதிப்பு தற்போது ரூ 8,800 கோடி என அதிகரித்துள்ளது. Adani Ports நிறுவனத்தில் ரூ 4,472 கோடி முதலீடு செய்ததில், அதன் மதிப்பு தற்போது ரூ 7,766 கோடி என அதிகரித்துள்ளது.
Adani Power நிறுவனத்தில் ரூ 4,245 கோடி முதலீடு செய்ததில், தற்போது அதன் மதிப்பு ரூ 8,718 கோடி என அதிகரித்துள்ளது. நவம்பர் 24 முதல், அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு உயர்ந்து, அதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.4.5 லட்சம் கோடி அதிகரித்து ரூ.14.8 லட்சம் கோடியாக உள்ளது.
1990களில் அமெரிக்காவுக்கு குடியேறிய ராஜீவ் ஜெயின் 1994ல் சுவிஸ் நிறுவனமான Vontobel-ல் பணியாற்ற துவங்கியுள்ளார். 2014ல் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். தற்போது ராஜீவ் ஜெயினின் மொத்த சொத்து மதிப்பு என்பது 3.2 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |