அம்பானிக்கு போட்டியாக ஒன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் அதானி
அதானி குழுமம் ஒன்லைன் வணிகம் மற்றும் UPI பரிவர்த்தனை சேவைகளை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
UPI சேவை
இந்தியாவின் பாரிய பணக்காரர்களில் ஒருவர் கவுதம் அதானி. அதானி குழுமம் பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது.
ஆனால் UPI சேவைகளில் ஈடுபடவில்லை. இந்த நிலையில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக அதானியின் குழுமம் களமிறங்க உள்ளது.
அதாவது டிஜிட்டல் வணிகத்தில் அதானி குழுமம் களமிறங்குவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் பிரத்யேக கிரெடிட் கார்டு சேவைகளையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமான நகர்வு
பொது டிஜிட்டல் Payment Network மற்றும் Unified Payment Interface (UPI) ஆகியவற்றில் முதற்கட்டமாக பரிவர்த்தனைக்கான உரிமத்தைப் பெற, அதானி குழுமம் விண்ணப்பிக்க உள்ளது.
இதற்காக அரசாங்கத்தின் கீழ் இயங்கும் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான ஓபன் நெட்வொர்க் உடன் இணைந்து, ஒன்லைன் ஷொப்பிங் சேவைகளை வழங்க அதானி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதேபோல் குழுமத்தின் பிற வணிகங்களான எரிவாயு மற்றும் மின் வணிக நுகர்வோர்களையும், விமான பயணிகளையும் அதன் ஒன்லைன் பரிவர்த்தனை சேவைகளை பயன்படுத்த செய்யும் என்று கூறப்படுகிறது.
டிஜிட்டல் வணிகத்தில் அதானி குழுமம் களமிறங்குவது வணிக உலகில் முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |