அத்திப்பழத்துடன் பால் சேர்த்து குடிச்சு பாருங்க...பல நன்மைகள் உங்களை தேடி வருமாம்
அத்திப்பழம் இனிப்பும், மொறுமொறுப்பும் நிறைந்த அத்திப்பழம்.
இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, தாமிரம், மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
இதை பாலில் சேர்த்து குடிக்கும் போது உண்டாகும் நன்மைகள் ஏராளம். தற்போது அவை என்ன என்பதை பார்க்கலாம்.
எப்படி எடுத்து கொள்ளலாம்?
2 அத்திப்பழத்துண்டுகளை சுமார் 4-5 மணி நேரம் வரை பாலில் ஊறவைக்கவும். பிறகு மென்மையான பேஸ்ட்டில் அரைக்கவும்.
இந்த பேஸ்ட்டை பாத்திரத்தில் விட்டு அதனுடன் ஒரு டம்ளர் பால் சேர்த்து கொதிக்கும் போது குங்குமப்பூவின் இழைகள் சேர்க்கவும். சூடாகவோ அல்லது குளிரவைத்தோ குடிக்கலாம்.
நன்மைகள்
- அத்திப்பழத்தை பாலுடன் சேர்த்து எடுப்பதன் மூலம் தூக்கம் ஆழமாக இருக்கும்.
- அத்திப்பழத்தில் பால் சேர்த்து குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
- எலும்புகள் மற்றும் பற்களுக்கு சிறந்ததும் கூட. இது மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கவும்.
- வீக்கத்தை குறைக்கவும், மூட்டு மற்றும் தசை வலியை குறைக்கவும் உதவுகின்றது.
- செரிமானத்தை மேம்படுத்தவும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
-
அத்திப்பழம் பாலில் நார்ச்சத்து உள்ளது. இது நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கவும் பசியை கட்டுப்படுத்தவும் செய்கிறது.
- அத்திப்பழத்தை உட்கொள்வது உடலில் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும். செரிமானத்தை எளிதாக்கும்.
குறிப்பு
பால் லாக்டோஸ் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் வெற்று நீரில் எடுக்கலாம். சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் அறிவுரைப்படி எடுக்கலாம்.