ஆலிவ் எண்ணெய் + எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு வாரம் குடிச்சு பாருங்க! உங்க உடலில் இந்த மாற்றம் நடக்குமாம்
ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் உங்கள் உடலில் பல அருமையான மாற்றங்கள் நடைபெறும் என்று கூறப்படுகின்றது.
சிறிதளவு ஆலிவ் எண்ணெயிலேயே, நமது உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் தேவையான அளவில் உள்ளன.
ஏனெனில் இரண்டு பொருட்களிலும் ஊட்டச்சத்து அதிகம். இந்த கலவை, நமது பாரம்பரிய மருத்துவ முறையில் முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது.
அந்தவகையில் தற்போது இது இரண்டையும் எடுத்து கொள்வதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
எப்படி எடுத்து கொள்வது?
அரை ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் எடுத்து அதில் ஃப்ரெஷாக பிழிந்த எலுமிச்சை சாறு அரை ஸ்பூன் கலக்குங்கள். அரை ஸ்பூன் அளவு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு போதும். அதற்கு மேல் எடுக்க வேண்டாம்.
இந்த சாற்றினை உணவை சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன் சாப்பிட வேண்டும். வாரம் 3 நாட்கள் அல்லது வாரம் ஒரு தடவை எடுத்துக் கொண்டால் போதும்.
நன்மை
- மலச்சிக்கலில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தா, இதனை குடிக்கும்போது, இதிலுள்ள ஆலிவ் எண்ணெய் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.
- இந்த சாறை குடிக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். நோய்கள் தடுக்கப்படும். குறிப்பாக வெரிகோஸ் நரம்பை தடுக்கிறது.
- ஆலிவ் மற்றும் எலுமிச்சை கலவை குடிப்பதால் கொழுப்பு கல்லீரல் நோய் தடுக்கப்படுகிறது. கல்லீரலை மொத்தமாக சுத்தப்படுத்தும் க்ளென்சராக விளங்குகிறது.
- இது உடலில் அதிகப்படியாக சுரக்கும் அமிலங்களின் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. வயிற்றினுள் உண்டாகும் அழுத்தத்தை குணப்படுத்துவதால் வயிற்றுப் பிடிப்பு, வாய்வு, அசிடிட்டி , நெஞ்செரிச்சல் போன்றவை சரியாகிவிடும்.
- உடலில் உள்ள நச்சுக்களை முற்றிலும் அகற்றி உங்கள் எடை குறைக்க உதவுகின்றது.
- உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் விகிதத்தை சீர்படுத்துகிறது. கெட்ட கொழுப்பை குறைத்து செரிமானத்திற்குட்படுத்துகிறது.
- ஆலிவ் எண்ணெய் இதனை தடுக்கிறது. மூட்டுஇணைப்புகளில் நெகிழ்வுத்தன்மையை அதிகப்படுத்துகிறது.
- வயிற்றுக் கொழுப்பை கரைக்க இந்த ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு உதவி செய்கின்றது.
- கல்லீரலின் செயலை வகுவாக்குகிறது. பித்தப்பையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
- இதை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது, உயர் ரத்த அழுத்தம் சம நிலைக்கு வருகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் மினரல் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
- இது இதயத் துடிப்பை சீர் செய்கிறது. இதய நோய்கள் மற்றும் ஆர்த்ரைடிஸ் போன்ற கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.
- இந்த சாறு முகச்சுருக்கங்களை போக்க உதவுகின்றது. சருமம் மற்றும் கூந்தலுக்கு தடவவும் செய்யலாம். இது ஆரோக்கியமான நகம் சருமம், மற்றும் கூந்தலை வளரச் செய்கின்றது.
- நீங்கள் மாதம் ஒருமுறை கல்லீரல் சுத்தப்படுத்த இதனை சாப்பிடலாம். அரை ஸ்பூன் பதிலாக கால் கப் ஆலிவ் எண்ணெய் மற்றும் கால் கப் எலுமிச்சை சாறு கலந்து அதனை குடிக்க வேண்டும்
- ஆலிவ் எண்ணெய் நரம்புகளில் இருக்கும் இறுக்கத்தை குறைக்கும். மன அழுத்தத்தை தடுக்கிறது. மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
- சர்க்கரை வியாதியை தடுக்கும் முக்கிய கொழுப்பான மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் ஆலிவ் எண்ணெயில் இருப்பதால் சர்க்கரை வியாதியை இது முற்றிலும் தடுக்கின்றது.
குறிப்பு
பித்தப்பை கற்கள் இருந்தால் இதனை குடிக்க வேண்டாம். இது வயிற்று வலியை உண்டாக்கிவிடும். ஆகவே பித்தப்பை கற்கள் இருப்பவர்கள் இதனைமுயற்சிக்க வேண்டாம்.