பிரித்தானியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு; எவ்வளவு தெறியுமா?
பிரித்தானிய நிதியமைச்சர் ரிஷி சுனக் வரும் புதன்கிழமை அறிவிக்கவுள்ள தனது வருடாந்திர பட்ஜெட் அறிக்கையின் ஒரு பகுதியாக, விரைவான தடுப்பூசி தயாரிப்பிற்கு நிதியளிக்க 1.65 பில்லியன் பவுண்டுகள் கூடுதலாக அறிவிப்பார் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய கூடுதல் நிதியானது, தொடர்ந்து மக்களுக்கு தடுப்பூசி போடுவதோடு, பிரித்தானியாவின் அனைத்து பெரியவர்களுக்கும் ஜூலை 31-க்குள் ஒரு தடுப்பூசி டோஸ் வழங்கப்படுவதை உறுதி செய்யும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, மேலும் 33 மில்லியன் பவுண்டுகள் எதிர்காலத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் மாறுபாடுகளிலிருந்து பாதுகாக்கவும், தடுப்பூசி சோதனை மற்றும் மேம்பாட்டிற்காக செலவிடப்படும் என அறிவித்துள்ளது.
மேலும் 22 மில்லியன் பவுண்டுகள், வெவ்வேறு COVID-19 தடுப்பூசிகளின் சேர்க்கைகளின் செயல்திறனை சோதிக்க ஒரு ஆய்வுக்கு நிதியளிக்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியா இதுவரை 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியை வழங்கியுள்ளது. இது ஐரோப்பாவிலேயே மிக விரைவான தடுப்பூசி வெளியீடு என கூறப்படுகிறது.