BBLயில் 251 ஓட்டங்கள் குவித்த அணி! 54 பந்தில் 109 ரன் விளாசிய கேப்டன்
அடிலெய்டில் நடந்த பிக்பாஷ் போட்டியில், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தியது.
மேத்யூ ஷார்ட் அதிரடி சதம்
BBL 2025யின் 31வது போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. முதலில் ஆடிய அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் (Adelaide Strikers) 5 விக்கெட் இழப்பிற்கு 251 ஓட்டங்கள் குவித்தது.
🚨 Chris Lynn is IN 🚨
— KFC Big Bash League (@BBL) January 11, 2025
That's a 93m maximum against Michael Neser. #BBL14 pic.twitter.com/n3daVoyAie
இது பிக்பாஷ் லீக் வரலாற்றில் இரண்டாவது பெரிய ஸ்கோர் ஆகும். இதற்கு முன் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 273 ஓட்டங்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.
அணித்தலைவர் மேத்யூ ஷார்ட் 54 பந்துகளில் 7 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 109 ஓட்டங்கள் விளாசினார். கிரிஸ் லின் 20 பந்துகளில் 47 ஓட்டங்களும், அலெக்ஸ் ராஸ் 19 பந்துகளில் 44 ஓட்டங்களும் எடுத்தனர்.
🚨 FASTEST EVER STRIKERS HUNDRED 🚨
— KFC Big Bash League (@BBL) January 11, 2025
Matt Short has made history at the Adelaide Oval - bringing up a ton off 49 balls. #BBL14 pic.twitter.com/qzsrxoo8qm
அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் வெற்றி
பின்னர் களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் (Brisbane Heat) 195 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆகி தோல்வியுற்றது.
அதிகபட்சமாக நாதன் மெக்ஸ்வீனி 24 பந்துகளில் 43 ஓட்டங்களும், மேட் ரென்ஷா 16 பந்துகளில் 34 ஓட்டங்களும் விளாசினர்.
டிஆர்க்கி ஷார்ட் 4 விக்கெட்டுகளும், லியாம் ஹஸ்கெட் மற்றும் லாய்டு போப் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Returning from injury, that was very special from Matt Short 👏 #BBL14 pic.twitter.com/CRiPke6DNH
— KFC Big Bash League (@BBL) January 11, 2025
Super Saturday night for the @StrikersBBL 👏#BBL14 pic.twitter.com/AMpvSoP7rW
— KFC Big Bash League (@BBL) January 11, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |