32 பந்தில் 80 ரன்! ருத்ர தாண்டவமாடிய வீரர்..சிக்ஸர் அடித்து வெற்றி (வீடியோ)
பிக்பாஷ் லீக்கின் இன்றைய போட்டியில், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹோபர்ட் ஹரிக்கேன் அணியை வீழ்த்தியது.
அடிலெய்டு அபார பந்துவீச்சு
Bellerive Oval மைதானத்தில் நடந்த போட்டியில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் மற்றும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய ஹோபர்ட் அணியில் தொடக்க வீரர்களான பென் மெக்டெர்மாட் (7), மேத்யூ வேட் (14) இருவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த வீரர்கள் ஓரளவு ஓட்டங்கள் சேர்த்ததால் ஹோபர்ட் அணி 167 ரன் குவித்தது. அதிகபட்சமாக மெகலிஸ்டர் ரைட் 37 (27) ஓட்டங்களும், காலேப் ஜுவெல் 32 (30) ஓட்டங்களும் எடுத்தனர். அடிலெய்டு தரப்பில் தோர்ன்டன், ஓவெர்ட்டன் மற்றும் போய்ஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
It comes down to this, let's go 'Canes ?#TasmaniasTeam pic.twitter.com/IAAnGlOtmW
— Hobart Hurricanes (@HurricanesBBL) January 11, 2024
மாஸ் காட்டிய ஜேக் வெதரால்ட்
பின்னர் களமிறங்கிய அடிலெய்டு அணியில் டி ஆர்க்கி ஷார்ட் 20 ஓட்டங்களில் அவுட் ஆக, கேப்டன் மேத்யூ ஷார்ட் அதிரடியாக 25 பந்துகளில் 39 ஓட்டங்கள் குவித்தார்.
4️⃣ - 6️⃣ - 4️⃣
— KFC Big Bash League (@BBL) January 11, 2024
Here comes, Jake Weatherald! #BBL13 pic.twitter.com/bLZ3aoqfQS
அடுத்து களமிறங்கிய ஜேக் வெதரால்ட் (Jake Weatherald) ருத்ர தாண்டவமாடி அரைசதம் அடித்தார். சிக்ஸர், பவுண்டரிகளை பறக்க விட்ட அவர், 32 பந்துகளில் 80 ஓட்டங்கள் விளாசி களத்தில் நின்றார். இதில் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும்.
அவருக்கு உறுதுணையாக ஆடிய ஆடம் ஹோஸ் 21 பந்துகளில் ஒரு சிக்சருடன் 25 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 15.5 ஓவரிலேயே 169-2 ஓட்டங்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
The moment that took us into the top four! #BBL13 #OurCityOurTeam https://t.co/4xCo7BRkXq
— Adelaide Strikers (@StrikersBBL) January 11, 2024
நடப்பு தொடரில் 6வது தோல்வியை சந்தித்ததன் மூலம் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணி வெளியேறியது. அடிலெய்டு அணி 4 வெற்றிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |