தனியாளாக 66 ஓட்டங்கள் விளாசியும் வீண்: கடைசி பந்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் த்ரில் வெற்றி
Adelaide strikers women won by 4 wickets: அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹோபார்ட் ஹரிக்கேன்ஸை வீழ்த்தியது.
பெல்லெரிவ் ஓவல் மைதானத்தில் நடந்த மகளிர் பிக் பேஷ் லீக் போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.
நிக்கோலா கேரி அபாரம்
அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் அணிகள் மோதிய மகளிர் பிக் பேஷ் லீக் போட்டி பெல்லெரிவ் ஓவல் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் அணியில் லிஸில்லி லீ 19 ஓட்டங்களிலும், ரேச்சல் ட்ரெனமன் 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
சமரி அதப்பத்து 10 ஓட்டங்களில் இருந்தபோது ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினார். மறுமுனையில் அணித்தலைவர் நிக்கோலா கேரி (Nicola Carey) தனியாளக ஓட்டங்களை சேர்த்தார்.
அவரது அபார ஆட்டத்தின் மூலம் ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் அணி 138 ஓட்டங்கள் எடுத்தது. கேரி ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் எடுத்தார்.
வெற்றி பெற வைத்த எக்லெஸ்ஸ்டோன்
பின்னர் களமிறங்கிய அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி விரைவாக இலக்கினை நோக்கி பயணித்தது. எம்மா டி பிரௌகி 41 ஓட்டங்களும், வோல்வார்ட் 27 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட, 5 பந்துகளில் 8 ஓட்டங்கள் எடுத்தது. கடைசி பந்தில் 4 ஓட்டங்கள் தேவைப்பட, சோபி எக்லெஸ்ஸ்டோன் பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார்.
ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் அணியின் தரப்பில் மோலி ஸ்ட்ரானோ, லாரென் ஸ்மித் தலா 2 விக்கெட்டுகளும், கேரி மற்றும் இஸபெல்லா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
