தவெக-வில் இணையும் ஆதவ் அர்ஜுனா.., கட்சியில் முக்கிய பதவி கொடுக்கும் விஜய்?
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக-வில் இணையும் ஆதவ் அர்ஜுனா
விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் விஜயை ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்தார்.
அப்போது, தவெகவில் ஆதவ் அர்ஜுனா இணைவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாகத் தெரிகிறது.
இந்நிலையில் தவெக கட்சியில் ஆதவ் அர்ஜுனாவிற்கு தேர்தல் சிறப்புப் பிரிவு பதவி வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே தேர்தல் ஆலோசகராக பணியாற்றி இருப்பதால், தவெகவில் அதுசார்ந்த பொறுப்பு அளிக்கப்பட இருப்பதாக பார்க்கப்படுகிறது.
தலைவர், பொதுச் செயலாளருக்கு அடுத்தபடியாக ஆதவ் அர்ஜுனா இருப்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |