நடிகர் பிரவுவின் மகளுடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருமணம்! வைரலாகும் புகைப்படங்கள்
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துள்ளார்.
தமிழ் இயக்குநர்
தமிழில் திரிஷா இல்லனா நயன்தாரா எனும் படத்தை இயக்கி அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன்.
அதனைத் தொடர்ந்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா, மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்.
அத்துடன் K-13, நேர்கொண்ட பார்வை, கோப்ரா உள்ளிட்ட படங்களில் ஆதிக் நடித்தும் உள்ளார்.
பிரபு மகளுடன் திருமணம்
இந்த நிலையில் சென்னையில் இன்று ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
பிரபல நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை அவர் கரம்பிடித்துள்ளார். இந்த திருமண நிகழ்வில் நடிகர் விஷால் உட்பட திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |