தீபாவளி ஸ்பெஷல் தித்திக்கும் சுவையில் அதிரசம்.., எப்படி செய்வது?
தீபாவளி பண்டிகை என்றாலே நாம் அனைவரும் வீட்டில் இனிப்பு, காரம் என பண்டங்கள் செய்து சாப்பிடுவது வழக்கம்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் அதிரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி - 2 கப்
- வெல்லம் - 2 கப்
- நெய் - 1 ஸ்பூன்
- ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் அரிசியை நன்குக் கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து பின் துணியில் அரிசியை பரப்பி உலரவைக்கவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் அரிசியை செத்து நன்கு அரைத்து சல்லடைக் கொண்டு சலித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்ததாக வெல்லத்தை உடைத்து பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.
பின் அதோடு அரைத்து சலித்து வைத்துள்ள மாவை கொட்டி கட்டியில்லாமல் கிளறவும்.
இதைத்தொடர்ந்து அதோடு ஏலக்காய் பொடி, நெய் ஊற்றி கிளறி பருத்தித் துணியால் கட்டி இரண்டு நாட்கள் ஊறவிடவும்.
பின்னர் கையில் நெய் தடவிக் கொண்டு மாவை நன்கு பிசைந்துகொள்ள வேண்டும்.
இறுதியாக கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழை இலையில் நெய் தடவி அதில் மாவை அதிரசம் போல் தட்டி பொறித்து எடுத்தால் சுவையான அதிரசம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |