சுதந்திர தின விழாவை கொண்டாடிய கோவில் யானை
இந்தியாவில் இன்று 77வது சுதந்திரதினம் நாடெங்கும் கொண்டாடிவருகின்ற சூழலில், ஆதி கும்பேஸ்வரர் கோவில் யானையும் சுதந்திரதினத்தை கொண்டாடியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் ஆதி கும்பேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். மேலும் இக்கோயில் 1300 ஆண்டுகள் பழமையானது.
ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது. மேலும் இங்குள்ள கோயில் யானை மங்களத்தின் நெற்றியில் தேசியக்கொடி வரையப்பட்டுள்ளது.
தேசிய கொடியை கையில் ஏந்திய யானை மங்களம் ஆதிகும்பேஸ்வரரை வழிபட்டு பிரகாரத்தை சுற்றிவந்து சுதந்திர தின விழாவை கொண்டாடியுள்ளது. இதை கண்ட ஏராளமான பக்தர்கள் செல்போனில் படம் பிடித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |