7 வயது வித்தியாசம்.., மீண்டும் திருமணம் செய்தார்களா அதிதி ராவ்- சித்தார்த் ஜோடி?
திருமண சீசனில் திரையுலகைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் தங்கள் திருமணத்தின் புதிய புகைப்படங்களைப் சமூக ஊடகங்களில் பகிர்ந்துக்கொள்வது வழக்கம்.
அந்தவகையில் அதிதி ராவ் ஹைடாரி மற்றும் சித்தார்த் ஆகியோர் 400 ஆண்டுகள் பழமையான கோவிலில் தங்கள் திருமணத்திற்குப் பிறகு சமூக ஊடகங்களில் தற்போது புதிய படங்களைப் பகிர்ந்துள்ளனர்.
அதிதி மற்றும் சித்தார்த் திருமணத்தின் புதிய படங்களைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சித்தார்த்-அதிதி ராவ் திருமணம்
பொதுவாகவே சினி துறையில் நடிக்கும் ஜோடிகள் உண்மையாகவே ஜோடியாகப் போகின்றார்கள் என்றால் ரசிகர்கள் மத்தியில் பெரும்பாலும் பிரபலமாகிவிடுவார்கள்.
அப்படி நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இருவரும் காதலித்து தெலுங்கானாவில் இருக்கும் கோவிலில் இருவீட்டார் சம்பந்தத்துடன் நிச்சயதார்த்தத்தை செய்தார்கள்.
அதையடுத்து செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி சித்தார்த்-அதிதி திருமணம் கோவிலில் வைத்து தென்னிந்திய முறைப்படி எளிமையாக நடந்து முடிந்தது.
இந்நிலையில் அவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் மேலும் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் இருவருக்கும் இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இரண்டாவது திருமணமா?
சமீபத்திய புகைப்படங்களில் அதிதி ராவ் ஹைதாரி சிவப்பு நிற லெஹங்கா அணிந்துள்ளார்.
நடிகர் சித்தார்த் மீண்டும் தந்தம் கொண்ட ஷெர்வானியை அணிந்துள்ளார். அதிதி ராவ் ஹைதாரி சித்தார்த்துடன் இணைந்து தனது சிறப்பு தினத்தின் பல படங்களைப் பகிர்ந்துள்ளார்.
இது ரசிகர்களிடையில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |