அதிதி சங்கர் திருமணம்: கண்டிஷன் போட்ட சங்கர்
நடிகை அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இரண்டு வெற்றிப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.
முதல் படமே கார்த்தியுடன் ஜோடியாகவும் , இரண்டாவது படம் சிவகார்த்தியுடன் ஜோடியாகவும் நடித்துள்ளார்.
விருமன், மாவீரன் என அடுத்தடுத்த வெற்றியை தொடர்ந்து தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
விருமன் படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்திருந்த அதிதிக்கு படம் சிறப்பாக அமைந்தது.
இந்தப் படத்தின்மூலம் மதுரை வீரன் என்று துவங்கும் பாடலை பாடி பாடகியாகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவீரன் படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படம் 89 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்திலும் அதிதி வண்ணாரப்பேட்டையில என்ற பாடலை சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடியுள்ளார்.
இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அதர்வா தம்பியுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் அடுத்தடுத்து இரு படங்களிலும் கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாயுள்ளது.
தெலுங்கிலும் இவர் அடுததடுத்து இரண்டு பாடல்களை பாடியுள்ளார். இதனிடையே கடந்த சில தினங்களாக அதிதியின் திருமணம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதிதியின் திருமணம் குறித்து அவரிடம் அவரது தந்தையும் பிரபல இயக்குநருமான ஷங்கர் கண்டீஷன் போட்டுள்ளதாகவும், இன்னும் இரு ஆண்டுகளில் எவ்வளவு படங்களில் வேண்டுமானாலும் நடித்துக் கொள்ளலாம் என்றும் அதன்பிறகு திருமணம் செய்துக் கொள்ள அவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து அதிதி ஷங்கர் திருமணத்தை எண்ணி தான் உற்சாகமாக இருப்பதாகவும் தன்னுடைய மாப்பிள்ளை குறித்து தனக்கு தெரிய வேண்டும் என்று தற்போது பேசியுள்ளார்.
அதிதி ஷங்கர் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.
வித்தியாசமாக இவர் அடுததடுத்த கெட்டப்புகளில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் எண்ணிக்கை விரைவில் மில்லியனை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |