அமெரிக்கா வரிசையில் இடம் பிடிக்க காத்திருக்கும் இந்தியா... ஆதித்யா எல்1 வெற்றி பெறுமா?
சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக இந்தியாவின் ஆதித்யா எல்1 என்ற விண்கலத்துடன் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் வெற்றிகரமாக நேற்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
இந்த செயலானது வெற்றிகரமாக நடந்து முடிந்தால் உலக நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு தனிஇடம் கிடைக்கும் எனலாம்.
ஆதித்யா எல்1
ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து காலை 11.50 மணி அளவில் இந்தியாவின் ஆதித்யா எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' எனும் இடத்தில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.
ஆதித்யா எல்1 விண்கலம் எல்1 எனும் இலக்கை சென்றடைய சுமார் 127 நாட்கள் வரை ஆகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த திட்டத்தின் இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி பொறுப்பெடுத்துள்ளார். இந்தியா சார்பில் சூரியனை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அனுப்பப்படும் முதல் விண்கலம் இதுதான் என்ற பெருமையை ஆதித்யா எல் 1 பெறும்.
இதையடுத்து விஞ்ஞானி சோம்நாத் மற்றும் சோம்நாத் வாழ்த்து வெற்றியை நினைத்து தனது கருத்துகைளயும் தெரிவித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |