ஆதித்யா எல்-1: தற்போதைய நிலை என்ன? இஸ்ரோ வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பு
ஆதித்யா எல்-1 தான் செல்ல வேண்டிய பாதையில் சரியான திசையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஆதித்யா எல்1
ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து காலை 11.50 மணி அளவில் இந்தியாவின் ஆதித்யா எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' எனும் இடத்தில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.
ஆதித்யா எல்1 விண்கலம் எல்1 எனும் இலக்கை சென்றடைய சுமார் 127 நாட்கள் வரை ஆகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியிருந்தார்கள்.
இந்நிலையில் ஆதித்யா விண்கலன், தான் செல்ல வேண்டிய பாதையில் சரியான திசையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு
ஆதித்யா எல்1 விண்கலமானது தனது திட்டத்தின்படி, "டிராஜக்டரி கரெக்ஷன் மென்யூவர்" (Trajectory Correction Maneuver) என்ற வழிமுறையை நேற்று முன் தினம் 16 நொடிகளில் செய்து முடித்துள்ளது.
Aditya-L1 Mission:
— ISRO (@isro) October 8, 2023
The Spacecraft is healthy and on its way to Sun-Earth L1.
A Trajectory Correction Maneuvre (TCM), originally provisioned, was performed on October 6, 2023, for about 16 s. It was needed to correct the trajectory evaluated after tracking the Trans-Lagrangean…
மேலும் இனி வரும் வேலையையும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |