புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையில் திடீரென அனுமதி: அதிர்ச்சியில் நேரில் சென்ற விஜய்
விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவரை நடிகர் விஜய் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
புஸ்ஸி ஆனந்த்
கடந்த நவம்பர் 1 -ம் திகதி மாலை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் நடித்த லியோ படத்தின் வெற்றி விழா நடைபெற்றது.
அங்கு, அதிகமான ரசிகர்களை வரவைத்தது முதல், விழா முடிந்து அவர்களை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைப்பது வரை அனைத்து பணிகளையும் தளபதி விஜய் மக்கள் இயக்க மாநிலப்பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டார்.
இந்த பணிகளால் ஏற்பட்ட சோர்வு மற்றும் அயற்சி காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புஸ்ஸி ஆனந்த் சேர்க்கப்பட்டார்.
நேரில் சென்ற விஜய்
இந்த தகவலிருந்த நடிகர் விஜய் அதிர்ச்சியடைந்தார். இதனைத்தொடர்ந்து, மருத்துவமனைக்கு நேரில் சென்று புஸ்ஸி ஆனந்திடம் நலம் விசாரித்தார்.
மேலும், புஸ்ஸி ஆனந்த்தின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |