இளம் தாயார் கொலை வழக்கில் கனடாவில் ஆயுள் தண்டனை பெறும் பிரித்தானியர்
கனடாவில் தமது முன்னாள் காதலியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் பிரித்தானியர், இன்னொரு கொலையில் தமக்கு தொடர்பில்லை என ஒப்புதல் அளித்துள்ளார்.
கனடாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இளம் தாயார் மற்றும் 22 மாத பிஞ்சு குழந்தை ஆகியோர் மாயமான வழக்கில் சிக்கிய 36 வயதான Robert Leeming என்ற பிரித்தானியர், கனேடிய பொலிசாரால் கைதாகும் முன்னர், இந்த விவகாரத்தில் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றே கூறி வந்துள்ளார்.
2019 ஏப்ரல் 23ம் திகதி Jasmine Lovett(25) என்ற இளம் தாயார் மற்றும் அவரது 22 மாத பிஞ்சு குழந்தை Aliyah Sanderson ஆகியோர் திடீரென மாயமாகினர்.
இந்த வழக்கில் அதிர்ச்சி திருப்பமாக, பிரித்தானியாவின் Marlborough பகுதியை சேர்ந்த Robert Leeming என்பவர் தமது காதலியான Lovett-ஐ வாக்குவாதத்தின் நடுவே சுத்தியலால் தாக்கி, பின்னர் தலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளதை ஒப்புக்கொண்டார்.
2013ல் கனடாவுக்கு குடிபெயர்ந்த Robert Leeming, சம்பவம் நடந்த போது Lovett-ன் குடியிருப்பின் ஒருபகுதியில் வாடகைக்கு குடியிருந்து வந்தார். மட்டுமின்றி வாடகைக்கு குடியிருந்து வந்த நிலையிலேயே Lovett உடன் Robert Leeming உடல் ரீதியாக நெருக்கமானதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனிடையே Lovett கொலையை ஒப்புக்கொண்ட லீமிங், குழந்தைக்கு என்ன ஆனது என்பது தமக்கு தெரியாது என கூறி வருகிறார். இதனிடையே, கல்கரியில் இருந்து 70 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள Kananaskis பகுதியில் ஒரு கல்லறைத் தோட்டத்தில் இருந்து தாயார் மற்றும் குழந்தை இருவரின் சடலங்களை பொலிசார் மீட்டனர்.
சுமார் 2 வார காலம் விசாரணை தொடர்பில் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வந்த பொலிசார், போதையில் Leeming உளறிய தகவலில் இருந்தே இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி மற்றும் மாயமான இளம் தாயாருக்கும் பிஞ்சு குழந்தைக்கும் என்ன ஆனது என்பது தொடர்பில் கண்டுபிடித்தனர்.
தற்போது இந்த வழக்கில் பிரித்தானியரான Robert Leeming ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார்.