அதிமுக தொகுதி பங்கீடு - பாஜக, பாமக, அமமுக எத்தனை தொகுதிகளில் போட்டி?
2026 தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான தொகுதி பங்கீடு நடைபெற்றுள்ளது.
அதிமுக தொகுதி பங்கீடு
2026 தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாஜக, அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.

இதற்கான தொகுதி பங்கீடு இன்று நடைபெற்ற நிலையில், தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட கூட்டணி கட்சி தலைவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
இந்த தொகுதி பங்கீட்டில் பாஜகவிற்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவிற்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "நாங்கள் டெல்லிக்கு சென்றாலே திட்டமிட்டு அவதூறு பரப்புவது முதலமைச்சரின் வாடிக்கையாக உள்ளது நான் டெல்லி சென்றாலே முதலமைச்சர் பயப்படுகிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி உணர்வுப் பூர்வமான கூட்டணிமீதமுள்ள மற்ற கட்சிகளுடனும் இன்று இரவிற்கு முன்னதாக தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |