எம்.ஜி.ஆர் பேரனுக்கு அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு! அது குறித்து முதல்முறையாக மனம் திறப்பு
சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு கேட்டு மறுக்கப்பட்டது குறித்து அக்கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் பேரன் ராமசந்திரன் ரவி பேசியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயகுமாரின் மகன் ராமசந்திரன் ரவி இன்று தேனிக்கு சென்றார்.
அங்கு அதிமுக நிர்வாகிகள் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பேசுகையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆலந்தூர், பல்லாவரம், ஆண்டிபட்டி ஆகிய மூன்று தொகுதிகளில் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தேன்.
ஆனால் எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை, அதுகுறித்து எந்த வருத்தமும் இல்லை. கட்சியின் வெற்றிதான் முக்கியம். கட்சி சரியாகத்தான் முடிவு எடுத்திருக்கும்.
தாத்தா உருவாக்கிய கட்சியை தவிர வேறு எந்த கட்சிக்காகவும் உழைக்கப் போவதில்லை. சசிகலா அரசியலை விட்டு சென்றது அவரது சொந்த விருப்பம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சொந்த விருப்பம் இருக்கும்.
அதில் யாரும் தலையிட முடியாது இந்த தேர்தலில் அதிமுக 234 தொகுதியிலும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வர் ஆவார் என கூறியுள்ளார்.
