எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த சி.விஜய பாஸ்கர் - தவெகவில் இணைகிறாரா?
முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜய பாஸ்கர், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சி.விஜய பாஸ்கர் ராஜினாமா
அதிமுகவை சேர்ந்த 4 எம்.எல்.ஏ க்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர்.
ஏற்கனவே அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து முரண்பாடு ஏற்பட்டு சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் தனி அணியாக செயல்பட்டு வந்தனர்.

சமீபத்தில், அதிமுகவை சேர்ந்த 4 எம்.எல்.ஏ க்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என பலரும் கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜய பாஸ்கர், சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
அவரின் ராஜினாமா கடிதம் விதிப்படி முறையாக உள்ளதால் அதனை ஏற்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

நேற்றும் இன்றும், கட்சி தலைமையை நேரடியாக குறிப்பிடாமல் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்து வந்தார். இந்நிலையில், அவர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம், விராலிமலை, முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதன் மூலம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏக்களின் பலம் 42 ஆக குறைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |