எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர்
முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜய பாஸ்கர், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
எம்.ஆர்.விஜய பாஸ்கர் ராஜினாமா
அதிமுகவை சேர்ந்த 4 எம்.எல்.ஏ க்கள் கடந்த மாதம் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர்.
இதனையடுத்து கடந்த வாரம் முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜய பாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் இன்று முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜய பாஸ்கர், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தலைமை செயலகத்திற்கு சென்ற எம்.ஆர்.விஜய பாஸ்கர், சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

அவரின் ராஜினாமா கடிதம் விதிப்படி முறையாக உள்ளதால் அதனை ஏற்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இதன் மூலம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏக்களின் பலம் 41 ஆக குறைந்துள்ளது.
இதன் மூலம், முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு, கரூர் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
விஜய் குதிரை பேரம் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி கட்சியை உடைப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், உங்கள் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய சொல்லுங்கள் அவர்களுக்காக நான் பிரச்சாரம் செய்கிறேன். அவர்களை ஜெயிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு என முதல்வர் விஜய் தன்னிடம் கூறியதாக வைகோ தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |