அதிமுக தேர்தலில் தோற்க இது தான் முக்கிய காரணம்! சட்டசபையில் எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்
தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று அம்மா உணவகம் மற்றும் அம்மா கிளினிக்குகள் மூடப்படுவது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
அப்போது, அம்மா உணவகத்தை மூட திமுக அரசு முயற்சிப்பதாகவும், அம்மா உணவகத்தை மூடினால் அதற்கான தண்டனையை அனுபவிப்பீர்கள் என்றும் கூறினார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கையில், கலைஞர் பெயரில் இருந்த திட்டங்களை மூடியதால் தான் நீங்கள் இப்போது ஆட்சியை இழந்து நிற்கிறீர்கள் என்று கூறினார்.
மேலும், அம்மா உணவகத்தை மூடினால்தான் என்ன? என துரைமுருகன் சற்று கடுமையாக பேசினார். திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்களை அதிமுக அரசு மூடியது, நாங்கள் ஒரு திட்டத்தை மூடினால் என்ன தவறு? என கேள்வி எழுப்பினார்.
இதேபோல் அனைத்து இடங்களிலும் அரசு மருத்துவமனைகள் இருக்கும்போது கிளினிக்குகள் எதற்கு? என கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்மா கிளினிக்குகள் தேவையில்லை என்பதால்தான் மூடியதாக தெரிவித்தார்.