1000 சவரன் தங்க நகை கேட்டு வரதட்சணை கொடுமை! அதிமுக முன்னாள் MLA மீது புகார்: என்ன நடந்தது?

Tamil nadu AIADMK Marriage Crime Gold
By Thiru Feb 22, 2024 09:38 AM GMT
Report

1000 சவரன் தங்க நகைகள் கேட்டு வரதட்சணை கொடுமை செய்ததாக அதிமுக முன்னாள் MLA மீது அவரது மருமகள் பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

வரதட்சணையாக 1000 சவரன் தங்க நகைகள்

கடந்த 2011ம் ஆண்டு சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிமுக சார்ப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.கந்தன்.

சென்னை பெருநகர மாநகராட்சி 182 வது வார்டு மாமன்ற உறுப்பினராக உள்ள இவரது மகன் கே.பி.கே.சதீஷ்குமாருக்கும், சென்னை அம்பத்துரை சேர்ந்த ஸ்ரீ காந்த் என்பவரது மகளான நுரையீரல் மருத்துவர் ஸ்ருதி பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்காக அதிமுக முன்னாள் MLA கே.பி.கந்தன் வீட்டார் 1000 சவரன் தங்க நகைகளும் மாப்பிள்ளை-க்கு 100 சவரன் தங்க நகைகளும் இரண்டு விலை உயர்ந்த கார்களும் வரதட்சனையாக கேட்டுள்ளனர்.

admk ex mla kp kandhan demand 1000 soverign gold dowry,

ஆனால் பின்னர் ஏற்பட்ட சமாதானத்திற்கு பிறகு, சுமார் 600 சவரன் தங்கம், வெள்ளி நகைகள், 2 சொகுசு கார்கள் உள்ளிட்ட பலவற்றை கே.பி.கந்தன் குடும்பத்தினருக்கு வரதட்சணையாக கொடுத்து திருமணம் சிறப்பாக முடிந்துள்ளது.

இருப்பினும், அதிமுக முன்னாள் MLA கே.பி.கந்தனின் குடும்பம் மேலும் 400 சவரன் கேட்டு கொடுமை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் ஸ்ருதி பிரியதர்ஷினியின் குடும்பத்தினர் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இந்தியாவில் மலிவு விலையில் AI புரட்சி: ChatGPTக்கு சவால் விடும் அம்பானியின் ஹனுமான் AI

இந்தியாவில் மலிவு விலையில் AI புரட்சி: ChatGPTக்கு சவால் விடும் அம்பானியின் ஹனுமான் AI

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது புகார்

இந்த புகாரில், “என் பெயர் ஸ்ரீகாந்த் (58). நான் அம்பத்தூரில் மரக்கடை வைத்து வியாபாரம் செய்கிறேன். மேலும் கட்டுமானத் தொழில் செய்து வருகிறேன். என் மகள் சுருதி பிரியதர்ஷினி மருத்துவராக பணி புரிந்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்ய வேண்டி வரன் பார்க்கும்பொழுது ADMK-வை சேர்ந்த முன்னாள் MLA K.P. கந்தன் அவருடைய மகன் K.P.K. சதீஷ்குமார் வரன் சம்பந்தமாக என்னிடம் தொடர்பு கொண்டார்கள். இருவீட்டாரும் பேசி சம்மதித்து திருமணம் முடிவானது.

1000 சவரன் தங்க நகை கேட்டு வரதட்சணை கொடுமை! அதிமுக முன்னாள் MLA மீது புகார்: என்ன நடந்தது? | Admk Mla Kandhan Demand 1000 Soverign Gold Dowry

K.P. கந்தன் மற்றும் அவருடைய மனைவி சந்திரா அவர்கள் சார்பாக நிறைய நபர்கள் வருவார்கள் அதனால் திருமண நிச்சயதார்த்தம் கிண்டியில் உள்ள ITC Chola-வில்நடத்த வேண்டும் என்றும், நிச்சயதார்த்தத்திற்கு மண மகனுக்கு Rado Watch, வைர பிரேஸ்லட், தங்க செயின், வைர மோதிரம் போட வேண்டும் என்றும் திருமணத்திற்கு பெண்ணிற்கு குறைந்த பட்சம் 1000 சவரன் தங்க நகைகளும் மாப்பிள்ளை-க்கு 100 சவரன் தங்க நகைகளும் இரண்டு விலை உயர்ந்த கார்களும் வரதட்சனையாகவும், மேலும் திருமணம் அடையாரில் உள்ள ராமசந்திர கன்வென்சன் சென்டர்-ல் நடத்த வேண்டும் என்று நிர்பந்தித்தனர்.

நான் 1000 சவரன் தங்க நகை மட்டும் என்னால் செய்ய முடியாது என்றும், பெண்ணுக்கு 500 சவரனும், மாப்பிள்ளைக்கு 100 சவரனும் வரதட்சனையாக தருகிறேன் என்றும், மற்றவைகள் அவர்கள் வரதட்சனையாக கேட்டப்படி செய்கிறேன் என்று தெரிவித்த பின்பு 26.02.2018 அன்று நிச்சயதார்த்தமும், 25.04.2018-ல் திருமணமும் நடந்தது. K.P. கந்தன் வரதட்சனையாக கேட்டப்படி Audi கார் மற்றும் BMW கார் அதன் மதிப்பு 1.65 கோடி மற்றும் தங்க நகை 600 சவரன், வெள்ளி 20 கிலோ ஆகியவைகள் வரதட்சனையாக கொடுக்கப்பட்டு சீர்வரிசையாக கட்டில், பீரோ மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை கொடுத்தேன்.

திருமணம் நடந்த பிறகு சிறிது காலம் மாப்பிள்ளையும், என் மகளும் சந்தோஷமாக தான் இருந்தார்கள். அதன் பிறகு அதே வீட்டில் கணவருடன் வசிக்கும் மாப்பிள்ளையின் சகோதரி இந்துமதி, மாப்பிள்ளையின் அம்மா ஆகியோர்கள் திருமணத்திற்கு வரதட்சனையாக கேட்ட 1000 சவரன் நகையை போடவில்லை என்று என் மகளை வார்த்தையால் கொடுமை படுத்தியுள்ளனர். இவர்களின் கொடுமை தாங்காமல் என் மகள் என்னிடம் பலமுறை நேரில் வரும் பொழுதும் தொலைபேசியின் வாயிலாகவும் தெரியப்படுத்தியுள்ளார்.

1000 சவரன் தங்க நகை கேட்டு வரதட்சணை கொடுமை! அதிமுக முன்னாள் MLA மீது புகார்: என்ன நடந்தது? | Admk Mla Kandhan Demand 1000 Soverign Gold Dowry

நான் இதை K.P. கந்தனுக்கு தெரியப்படுத்தி என் மகளை பார்த்துக் கொள்ளுமாறும், கொடுமை படுத்த வேண்டாம் என்றும் நீங்கள் கேட்ட நகைகளை கொடுத்து விடுகிறேன் என்றும் கூறியிருந்தேன். என் மகளின் ஆடி மாதத்தின்போது மாப்பிள்ளை, அம்மா வற்புறுத்தலின் பேரில் என் மகளுக்கு வைரத்தில் தாலி செயினும், மாப்பிள்ளைக்கு வெள்ளியில் சாப்பிடும் தட்டு, டம்பளர் ஆகியவைகளையும் கொடுத்தேன். என் மகளின் முதல் திருமணம் நாள் அன்று என் மருமகனுக்கு ஒரு பெல்ட் அன்பளிப்பாக கொடுத்தேன். அவர் ஏன் தங்க நகை கொடுக்கவில்லை என்று என் மகளை அடித்து தகராறு செய்தார்.

அந்த சமயம் என் மகள் 5 மாத கர்pபினியாக இருந்தார். இந்நிலையில் என் மகளுக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்தது பெண் குழந்தை என்பதால் என் மகளின் கணவர் வீட்டில் யாருக்கும் சந்தோஷம் இல்லை அதை காரணமாக வைத்து என் மருமகன், அவருடைய அம்மா, தங்கை பலமுறை வார்த்தையால் கொடுமைபடுத்தி என் மகள் தற்கொலை செய்து கொள்ள எண்ணம் வரும்வரை அவர்கள் கொடுமை படுத்தியுள்ளார்கள்.

இதை தெரிந்து நான் மாப்பிள்ளையின் தந்தை K.P. கந்தனிடம் கூறியபோது, அவர் அவரின் வீட்டாரை கண்டிக்காமல் என் மகளை மிரட்டி இங்கு நடப்பதை எல்லாம் ஏன் உன் தந்தையிடம்  சொல்கிறாய் இன்னோரு முறை உன் தந்தை என்னிடம் பஞ்சாயத்திற்கு வந்தால் உன் குடும்பத்தையே அடியோடு ஒழித்து வடுவதாக கூறியதாக என் மகள் என்னிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்தார்.

1000 சவரன் தங்க நகை கேட்டு வரதட்சணை கொடுமை! அதிமுக முன்னாள் MLA மீது புகார்: என்ன நடந்தது? | Admk Mla Kandhan Demand 1000 Soverign Gold Dowry

இதன் பிறகு மே மாதம் 2021-ல் என் மகளை என் மகளின் கணவர், மாமியார், என் மகள் கணவரின் சகோதரி இந்துமதி ஆகியோர் அடித்து கொடுமைபடுத்தியுள்ளனர். அவரை மருத்துவமனைக்கு கூட அழைத்து செல்லாமல் எங்கே அழைத்து சென்றால் புகார் ஆகி விடுமோ என்று என் மகளின் கணவரின் சகோதரி இந்துமதி மருத்துவர் என்பதால் அவரே மருத்துவம் பார்த்து மருந்து கொடுத்தார்.

இந்நிலையில் என் மகளையும், குழந்தையையும் 2021-ம் வருடம் மே மாதம் 9-ம் தேதி வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டதன் காரணத்தினால் என் மகள் Cab மூலமாக என் வீட்டிற்கு வந்துவிட்டார். என் மகளை சேர்த்து வைக்க K.P. கந்தனிடம் நான் பலமுறை பேசியும் எந்த பலனும் இல்லை. அவர்கள் விவாகரத்து வேண்டி பொய்யான தகவலை சேர்த்து வழக்கு தொடுத்து அது குடும்ப நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. என் மகளை வீட்டை விட்டு அவர்கள் அனுப்பும்போது அவருடைய துணி மற்றும் நகைகள், செல்போன் ஆகியவைகளை மாப்பிள்ளையின் வீட்டிலேயே வைத்துவிட்டார்.

ரூ.9000 சம்பளத்திற்கு வேலை பார்த்த நபர்.,இன்று 2 நிறுவனங்களின் CEO-வாக உயரந்தது எப்படி? சொத்து மதிப்பு

ரூ.9000 சம்பளத்திற்கு வேலை பார்த்த நபர்.,இன்று 2 நிறுவனங்களின் CEO-வாக உயரந்தது எப்படி? சொத்து மதிப்பு

இந்நிலையில் என் மாப்பிள்ளை என் மகளின் அலைபேசியை உபயோகித்து அதில் உள்ள இன்ஸ்டாகிராமில் என் மகள் மருத்துவம் படிக்கும்போது அவரின் வகுப்பு தோழருடன் பேசியதை எல்லாம் எடுத்து என் மகளை அவமான படுத்த வேண்டி என் மகள் பிரிந்து இரண்டு வருடம் கழித்து தற்பொழுது இந்த சங்கதிகளை ஒரு மனுவாக நீதிமன்றத்தில் சமர்பித்ததோடு அல்லாமல் என்னுடைய உறவினர்களுக்கும் தெரியப்படுத்தி எங்கள் நன் மதிப்பை களங்க படுத்தியுள்ளார்கள்.

என் மகள் சேர்ந்து வாழவேண்டும் என்பதனால் நான் இது நாள் வரை என் மருமகன் சதீஷ்குமார் என் மருமகனின் தந்தை K.P. கந்தன், தாயார் சந்திரா, சகோதரி இந்துமதி ஆகியோர் மேல் எந்த புகாரும் காவல் நிலையத்திலோ, நீதிமன்றத்திலோ தெரிவிக்காமல் இருந்தேன். தற்பொழுது நான் K.P. கந்தனிடம் நேரிடையாக சென்று கேட்ட பொழுது என் பெண்ணிற்கு மேலும் 500 சவரன் நகை தர வேண்டும் என்றும், அவரின் மகனின் வியாபாரத்திற்கு 10 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும், தரவில்லை என்றால் உன் மகள் வாழமுடியாது என்று என்னை மிரட்டி அனுப்பிவிட்டார். என் மகளை வரதட்சனை கொடுமை செய்து வாழவிடாமல் என் வீட்டிற்கு அனுப்பிவிட்ட சதீஷ்குமார், அவரின் தந்தை K.P. கந்தன், தாயார் சந்திரா, அவருடைய மகள் இந்துமதி ஆகியோர்கள் மீது வரதட்சனை கொடுமை வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.” என்று புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

06 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி, உடுப்பிட்டி, Caledon, Canada

02 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, Kenton, United Kingdom

16 Apr, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, தெஹிவளை, வெள்ளவத்தை

03 May, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Edmonton, Canada, Toronto, Canada

05 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, சிட்னி, Australia

06 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, ஏழாலை, Harrow, United Kingdom

04 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

30 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US