தவெக தலைவர் விஜயை அதிமுக எம்எல்ஏ-க்கள் சந்திப்பதாக தகவல்
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்காக தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை பெற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இதற்கிடையே, தவெக தலைவர் விஜய் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நீலாங்கரையில் இருந்து பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்திற்கு வந்துள்ள அவர், முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, அதிமுக-வின் சில எம்எல்ஏ-க்கள் தவெக-விற்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை எம்ஆர்சி நகரில் சி.வி. சண்முகம் அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு, சி.வி. சண்முகம் தலைமையில் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் தவெக தலைவர் விஜயை சந்தித்து ஆதரவு தெரிவிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |