எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் அதிரடி வியூகம்! ஓ.பி.எஸ் அதிர்ச்சி... பொதுக்குழுவில் பரபரப்பு
அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில் இன்று அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.
அதில் நீதிமன்ற உத்தரவால் ஒற்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற முடியாத சூழல் நிலவும் நிலையில் மற்ற 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நிராகரித்து விட்டார்கள் என துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதால்
— DON Updates (@DonUpdates_in) June 23, 2022
ஒற்றைத் தலைமை வேண்டும் - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமிpic.twitter.com/2BlgjsS9Xl
ஒற்றைத் தலைமை வர வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து அனைத்து தீர்மானங்களும் பின்னர் நிறைவேற்றப்படும் என கூறினார்.
எடப்பாடி தரப்பின் இந்த அதிரடி வியூகத்தால் ஓ.பன்னீர்செல்வம் அதிர்ச்சியடைந்துள்ளார். அதிமுகவின் 50 ஆண்டுக்கால வரலாற்றில் முதன்முறையாக பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜூலை 11ஆம் திகதி அதிமுகவின் பொதுக்குழு மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது, அன்றைய தினம் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையில் பொதுக்குழு தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து பாதியில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.