அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் - 21 முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை, அதிமுக ஏறக்குறைய முடித்து விட்டது. இன்னும் சில சிறிய கட்சிகளுக்கே தொகுதிகள் வழங்க வேண்டியுள்ளது.
இதனையடுத்து, நேற்று அதிமுக தனது 297 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்
இந்நிலையில், அதிமுகவின் 23 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

1.எடப்பாடி- கே.பழனிசாமி
2.கே.பி.முனுசாமி - வேப்பனஹள்ளி
3.திண்டுக்கல் சீனிவாசன் - திண்டுக்கல்
4.நத்தம் விஸ்வநாதன் - நத்தம்
5.வேலுமணி - தொண்டாமுத்தூர்
6.தங்கமணி - குமாரபாளையம்
7.ஜெயக்குமார் - ராயபுரம்
8.சி.வி.சண்முகம் - மயிலம்
9.செல்லூர் ராஜூ - மதுரை மேற்கு
10.கே.பி.அன்பழகன் - பாலக்கோடு
11.காமராஜ் - நன்னிலம்
12.ஓ.எஸ்.மணியன் -வேதாரண்யம்
13.சி.விஜயபாஸ்கர் - விராலிமலை
14.கடம்பூர் ராஜூ -கோவில்பட்டி
15.உதயகுமார் - திருமங்கலம்
16.ராஜேந்திரபாலாஜி - சிவகாசி
17.பென்ஜமின் - மதுரவாயல்
18.அக்ரி கிருஷ்ணமூர்த்தி - கலசப்பாக்கம்
19.ராஜன் செல்லப்பா - திருப்பரங்குன்றம்
20.கருப்பண்ணன் - பவானி
21.கே.சி.வீரமணி -ஜோலார்பேட்டை
22.எம்.ஆர்.விஜயபாஸ்கர் -கரூர்
23.தாமரை எஸ்.ராஜேந்திரன் - அரியலூர்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல்.
— AIADMK - SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) March 25, 2026
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு. #EPSfor2026#Vote4AIADMK pic.twitter.com/HVvrcUtDpt
இந்த பட்டியலில், ராஜன் செல்லப்பா மற்றும் தாமரை எஸ்.ராஜேந்திரன் தவிர்த்து 21 முன்னாள் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தற்போது எம்எல்ஏவாக உள்ள 16 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 8வது முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
கடந்த முறை விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சி.வி.சண்முகம், இந்த முறை மயிலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து 8வது முறையாக ராயபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கடந்த முறை ராஜபாளையத்தில் போட்டியிட்ட கே.டி. ராஜேந்திரபாலாஜி, மீண்டும் சிவகாசி தொகுதியில் களம் காண்கிறார்.
போளூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இந்த முறை கலசப்பாக்கம் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |