கூட்டணி கட்சிகள் மட்டுமே முன்னிலை: அதிர்ச்சியில் அதிமுக
தமிழகத்தை பொறுத்தளவில் மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில், அதிமுக கடும் பின்னடவை சந்தித்துள்ளது.
பின்னடைவில் அதிமுக
10 மணி நிலவரங்களின்படி, அதிமுக கூட்டணியின் 2 கட்சிகள் முன்னிலை வகித்தன. ஆனால் அவை இரண்டுமே அதிமுக நேரடியாக களமிறங்கிய தொகுதிகள் அல்ல.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக விருதுநகர் தொகுதியிலும், தென்காசியில் புதிய தமிழகமும் இந்த வகையில் முன்னிலை வகித்தன.
விருதுநகரில் தேமுதிகவின் நட்சத்திர வேட்பாளரான விஜய பிரபாகரன் முன்னிலை வகிக்க, தென்காசியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி முன்னிலை வகிக்கிறார்.
இந்த இரு கூட்டணி வேட்பாளர்களுக்கு அப்பால், அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்க தடுமாறி வருகிறார்கள்.
இது அதிமுகவுக்கு மட்டுமன்றி அதன் நடப்பு பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கும் இக்கட்டை ஏற்படுத்த காத்திருக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |