ஹிட்லரின் காதலி பிறந்தநாள் பரிசாக கொடுத்த பென்சில்- ஏலத்தில் ரூ.3 கோடி வரை எதிர்பார்ப்பு
அடால்ஃப் ஹிட்லருக்கு சொந்தமானது என்று நம்பப்படும் ஒரு பென்சில் இந்த வாரம் பிரித்தானியாவில் ஏலம் விடப்பட உள்ளது.
ஹிட்லரின் பென்சில்
இந்த பென்சில் ஏப்ரல் 20, 1941 அன்று ஹிட்லரின் 52-வது பிறந்தநாளுக்காக அவரது காதலி ஈவா பிரவுனால் (Eva Braun) வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முதலில் 2002-ல் ஒரு சேகரிப்பாளரால் வாங்கப்பட்டது, அதன் மேல் "AH" என்ற ஹிட்லரின் முதலெழுத்துகள் மற்றும் பிற இடங்களில் "Eva" என்ற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது.
Image: PA
Image: PA
இந்த பென்ஸில் சுமார் £50,000 முதல் £80,000 வரை (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூபா.3 லட்சம் வரை) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிட்லரின் கையொப்பமிடப்பட்ட படம்
அதே நேரத்தில் ஹிட்லரின் கையொப்பமிடப்பட்ட படம் கிழக்கு பெல்ஃபாஸ்டில் உள்ள ப்ளூம்ஃபீல்ட் ஏலத்தில் விற்பனைக்கு வருகிறது.
சிறப்பு சேகரிப்பாளர்கள் முதன்மை வாடிக்கையாளர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படும் அசாதாரண அளவிலான பொருட்கள் சுற்றியுள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Image: PA
Adolf Hitler, Eva Braun, Hitler Pencil, Birthday Gift, Auction