ஏழு நாட்களுக்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள்! கல்வி அமைச்சர் அறிவிப்பு
2020 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 7 நாட்களுக்குள் வௌியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் உயர்தர பரீட்சைகள் இடம்பெற்றிருந்தது.
நாடளாவிய ரீதியில் உள்ள 2,648 பரீட்சை மத்திய நிலையங்களில் உயர்தர பரீட்சை இடம்பெற்றிருந்தது. இம்முறை பரீட்சைக்காக 362,824 பரீட்ச்சார்த்திகள் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைகழகங்கள் மே மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை 2 ஆம் திகதி எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.