மாங்காய் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா! இதய நோய் கூட வராது
மாங்காயை பார்த்தாலே பலருக்கும் நாவில் எச்சில் ஊறும். அதுவும் மிளகாய் தூள் கலந்து மாங்காயை சாப்பிடுவதில் இருக்கும் சுவையே தனி!
ஆனால் மாங்காய் சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும், பருக்கள் வரும் என்று பலரும் அதை வாங்கி சாப்பிடமாட்டார்கள்.
அதே சமயம் மாங்காய் சாப்பிட்டால் உடலுக்கு நம்பமுடியாத வகையில் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது.
மாங்காயில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது உடலில் எலக்ட்ரோலைட் அளவை பராமரிக்க உதவி, அதனால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்து, இதய நோயின் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்.
நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்பட்டு வந்தால், பச்சை மாங்காயை சாப்பிடலாம், இதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைப்பதை உணரலாம்.
பச்சை மாங்காயை மதிய வேளையில் ஒரு துண்டு சாப்பிட்டால், மதிய வேளையில் வரும் தூக்கத்தைத் தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பச்சை மாங்காய் கல்லீரல் சம்பந்தமான பிரச்னைகளைத் தடுக்கும். ஏனெனில் மாங்காய் பித்தநீரின் சுரப்பை அதிகரிக்கும் மற்றும் குடலை பாக்டீரியா தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும்.
மாங்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொலாஜனின் கூட்டுச்சேர்க்கையில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆகவே மாங்காயை சாப்பிடுவதால் சருமத்தின் பொலிவு அதிகரிப்பதோடு, முதுமையும் தள்ளிப் போகும்.