வெறும் 100 கிராம் பீட்ரூட் சாப்பிட்டால் கிடைக்கும் அடுக்கடுக்கான நன்மைகள்! மலச்சிக்கலுக்கும் தீர்வு
நம்மில் பலருக்கும் பீட்ரூட்டை பொரியல் செய்து சாப்பிட பிடிக்காது. ஏனெனில் அதில் உள்ள ஒருவகை இனிப்பு, சிலருக்கு பிடிக்காமல் போய் விடுகிறது.
இதனாலே ஏராளமான நல்ல விடயங்களை கொண்ட பீட்ரூட்டை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். விலைகுறைவான அதேநேரம் உடலுக்கு தேவையான அத்தனை அத்தியாவசியத்தையும் தன்னுள் பீட்ரூட் வைத்துள்ளது.
அன்றாட உணவில் 100 கிராம் பீட்ரூட் சேர்ப்பதால் உடலில் ஏற்படும் அற்புதங்கள் குறித்து காண்போம்.
இரத்த அழுத்தம்
பீட்ரூட்டினுள் உள்ள உட்பொருட்கள் தமனிச் சுவர்களை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்கும். எனவே தினமும் உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், பீட்ரூட்டை அன்றாடம் சேர்த்து நன்மைப் பெறுங்கள்.
கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்
பீட்ரூட்டில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் பீட்டா சையனின் உள்ளது. பீட்டா சையனின்கள் பீட்ரூட்டிற்கு நிறத்தை வழங்குவதோடு, செல்களுக்கு வலுவூட்டவும் செய்யும். மேலும் பீட்ரூட் இரத்த நாளங்களில் படிந்துள்ள கெட்ட கொழுப்புக்களைக் கரைத்து, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
எலும்பு பிரச்சனைகள்
பீட்ரூட்டில் சிலிகா உள்ளது. இது எலும்புகளுக்கு வேண்டிய கால்சியத்தைப் பெற உதவும். கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களுக்கு அத்தியாவசியமானது.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் இருப்பவர்கள், பீட்ரூட்டை உணவில் சேர்ப்பதன் மூலம், சர்க்கரையின் மீதுள்ள தங்களது ஆவல் பூர்த்தியாகும். மேலும் பீட்ரூட்டில் மிதமான அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், இது மெதுவாக சர்க்கரையை வெளியிடும்.
உடல் சோர்வு
மிகுந்த களைப்பை உணர்ந்தால், தினமும் சிறிது பீட்ரூட்டை அன்றாட உணவில் சேர்த்து வர, களைப்பு நீங்கி, உடலுக்கு புத்துணர்ச்சி கிட்டும்.
மலச்சிக்கல்
பீட்ருட்டில் உள்ள அதிகப்படியான கரையக்கூடிய நார்ச்சத்து, மலமிளக்கி போன்று செயல்பட்டு, மலச்சிக்கலில் இருந்து விடுதலை தரும்.