இங்கிலாந்தில் இலவச விசாவுடன் வேலை என வெளியாகியுள்ள விளம்பரம்: குருத்வார் எச்சரிக்கை...
இங்கிலாந்தில் இலவச விசா, பயணச்சீட்டு, இலவச உணவுடன் வேலை வேண்டுமா? இந்த எண்ணை அணுகுங்கள் என இங்கிலாந்தில் உள்ள குருத்வார் ஒன்றின் பெயரில் சமூக ஊடகம் வாயிலாக விளம்பரங்கள் வெளியாகிவருகின்றன.
வேலை குறித்து விசாரித்த இந்தியர்
இங்கிலாந்தின் கென்டிலுள்ள குருத்வார் ஒன்றிற்கு வந்த ஒருவர், இந்தியாவில் வாழும் தன் நண்பர் ஒருவர், இப்படி ஒர் விளம்பரத்தைப் பார்த்ததாகக் கூறி, அது குறித்து குருத்வாரின் பொதுச் செயலரான Jagdev Singh Virdee என்பவரிடம் விசாரித்துள்ளார்.
அப்போதுதான், தங்கள் குருத்வார் பெயரைப் பயன்படுத்தி, இந்தியர்களைக் குறிவைத்து இப்படி ஒரு மோசடி நடப்பது Jagdevக்கு தெரியவந்துள்ளது.
Pic. iStock
மோசடி குறித்து எச்சரிக்கை
ஆகவே, இப்படி தங்கள் குருத்வார் பெயரில் இலவச விசா, பயணச்சீட்டு, இலவச உணவுடன் வேலை தருவதாகக் கூறும் செய்திகளில் உண்மையில்லை, அது ஒரு மோசடி என அந்த குருத்வார் தங்கள் இணையதளத்தில் ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.
பொலிசாருக்கு இந்த மோசடி குறித்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளது, அவர்களும் இந்த மோசடி குறித்து விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.