பெண் வழக்கறிஞரை காதலித்து ஏமாற்றிய பிக்பாஸ் விக்ரமன்... பரபரப்பு குற்றச்சாட்டு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்த விக்ரமன், பெண் ஒருவரை காதலித்து ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் விக்ரமன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6ல் கலந்து கொண்டு, இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் விக்ரமன். இந்த சீசனில் அசீம் மற்றும் விக்ரமன் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
ஆனாலும் அதையெல்லாம் முறியடித்து மக்கள் மத்தியில் இடம்பிடித்ததுடன், இரண்டாவது இடத்தையும் தட்டித் தூக்கியுள்ளார். இந்நிலையில் விக்ரமன் குறித்த அதிர்ச்சி தகவல் வைரலாகி வருகின்றது.
கிருபா முனுசாமி என்ற பெண் வழக்கறிஞர் ஒருவர் விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டை வைத்துள்ளார். மேலும் டுவிட்டரில் பல ஆதாரத்தை வெளியிட்ட அவர், அரசியல் ஆதாயத்திற்காக காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் தன்னை அறிவார்ந்தவராக காட்டிக்கொண்டு விக்ரமனா இப்படியொரு தவறை செய்துள்ளார் என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் இந்த சர்ச்சைக்கு விக்ரமன் எந்தவொரு பதிலும் அளிக்காமல் இருக்கின்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |