ஜேர்மனியில் முதல் முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வரும் ஒரு தீவிர வலதுசாரிக் கட்சி

Alternative for Germany Party
By Arbin Sep 06, 2026 08:50 AM GMT
Report

AfD bids for first taste of power: தீவிர வலதுசாரிக் கட்சியான AfD முதல் முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வருகிறது.

ஜேர்மனியின் கிழக்குப் பகுதியில் இந்த வார இறுதியில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய தேர்தல் நடைபெறவிருப்பதால், ஜேர்மானிய மக்கள் மூச்சைப் பிடித்துக் காத்திருக்கின்றனர்.

அதிகாரத்தைக் கைப்பற்றும்

தீவிர வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி, Saxony-Anhalt மாகாண நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற இலக்கு வைத்துள்ளது.

ஜேர்மனியில் முதல் முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வரும் ஒரு தீவிர வலதுசாரிக் கட்சி | Afd Bids First Taste Of Power

பெரும்பான்மையுடன் வெற்றி கிடைத்தால், போருக்குப் பிந்தைய காலத்தில் ஜேர்மனியில் மாகாண அளவிலான அதிகாரத்தை ஒரு தீவிர வலதுசாரிக் கட்சி கைப்பற்றுவது இதுவே முதல் முறையாக அமையும்.

AfD-யின் எதிர்ப்பாளர்களைப் பொறுத்தவரை, இது தீவிர ஆபத்து நிறைந்த ஒரு விடயமாகும். ஆனால், AfD-ஐ பொறுத்தவரை நாடு தழுவிய அளவில் அதிகாரத்தைக் கைப்பற்றும் தனது கனவை நோக்கிய ஒரு படிக்கல்லாகவே அக்கட்சி இதைப் பார்க்கிறது.

இது ஜேர்மனியின் வரலாற்றையே மாற்றக்கூடிய ஒரு தேர்தல் என்றே கூறுகின்றனர். மட்டுமின்றி, தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்வாரா என்பது குறித்த வதந்திகள் நீடிப்பதால், நெருக்கடியில் சிக்கியுள்ள கன்சர்வேடிவ் (சிடியு) கட்சியின் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸுக்கு இந்த முடிவு புதிய சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை

ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை

சமீபத்திய பொதுக் கூட்டங்களின்போது கூச்சலிட்டு வரவேற்கப்பட்டதால், மெர்ஸ் ஒரு தேர்தல் பலமாகப் பார்க்கப்படவில்லை. தீவிர வலதுசாரிகளின் எழுச்சியைத் தடுப்பதாக அளித்த வாக்குறுதிக்கு நேர்மாறான நிலை ஏற்பட்டுள்ளதால், அனேகமாக மெர்ஸ் தற்போது வருத்தப்படலாம் என்றே கூறுகின்றனர்.

ஆனால் இதற்கு மாறாக AfD-யின் வேட்பாளர் Ulrich Siegmund விவாதத்திலும் ஊடகச் செய்திகளிலும் ஆதிக்கம் செலுத்தியதாகத் தெரிகிறது. 35 வயதேயான அவர் சமூக ஊடகங்களில் கவனம் ஈர்த்து வருகிறார்.

புலம்பெயர்ந்தோர், பொதுப் பாதுகாப்பு, ஜேர்மனியின் தள்ளாடும் பொருளாதாரம், அதிக எரிசக்தி செலவுகள் மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படும் உதவிகள் ஆகியவை குறித்து வாக்காளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சர்ச்சைக்குரியவையாக

மக்களும் Ulrich Siegmund மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. மற்ற ஆதரவாளர்கள் அவ்வளவு உறுதியாக இல்லை, ஆனால் பல தசாப்தங்களாக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரதான கட்சிகள் மீது தங்களுக்கு நம்பிக்கை போய்விட்டதாகக் கூறுகிறார்கள்.

இருப்பினும் Saxony-Anhalt மாகாணத்தில் AfD அளித்துள்ள வாக்குறுதிகள் ஜேர்மனிக்குள் மிகுந்த சர்ச்சைக்குரியவையாக உள்ளன. இயல்பான குடும்பக் கட்டமைப்புகளை விட, பாலியல் பிறழ்வுகள் மற்றும் இனப்பெருக்க நோக்கமற்ற வாழ்க்கை முறைகள் தீவிரமாக ஊக்குவிக்கப்படுவதாக அதன் தேர்தல் அறிக்கையில் கூறுகிறது.

ஜேர்மனியில் முதல் முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வரும் ஒரு தீவிர வலதுசாரிக் கட்சி | Afd Bids First Taste Of Power

பாடசாலைகளில் LGBT வானவில் கொடிகள் பறக்கவிடப்படுவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு நாஜிக்களைப் பற்றி குறைவாகவும், ஜேர்மானிய வரலாற்றின் நேர்மறையான அம்சங்களைப் பற்றி அதிகமாகவும் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கட்சி வாதிடுகிறது.

குடியேற்றம் தொடர்பான விவகாரத்தில், மாகாணத்தில் வதிவிட உரிமையை இனி கொண்டிராத குடியேறிகளை கைது செய்து வெளியேற்றும் திட்டங்களின் ஒரு பகுதியாக, ஒரு சிறப்புப் பணிக்குழு அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US