புதிய கிராபிக்ஸ் அப்டேட்களுடன் 2025 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்னென்ன?
இந்தியாவின் நம்பர் 1 இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), தனது வாடிக்கையாளர்களை கவரும் விதமாக தொடர்ந்து புதுமையான வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், ஓசூரில் அதிநவீன இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை கொண்டுள்ளது.
இங்கு தயாராகும் டிவிஎஸ் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் இந்திய சாலைகளை மட்டுமல்லாது, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சாலைகளையும் ஆக்கிரமித்துள்ளன.
டிவிஎஸ் ஸ்போர்ட்
டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த அபார வெற்றிக்கு முக்கிய காரணம் பட்ஜெட் விலையில் அசத்தலான புதிய பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்துவது தான்.
அந்த வரிசையில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் குறைந்த விலை தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிளாக டிவிஎஸ் ஸ்போர்ட் (TVS Sport) உள்ளது.
இதன் குறைந்த விலை காரணமாக, இது இந்தியாவிலுள்ள நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் முதல் தேர்வாக விளங்குகிறது.
Zabardast bike, Dhamakedar offers!
— Power & Torque TVS (@PowerTorqueTVS) April 27, 2023
Aaj hi ghar laye naya TVS sport self-start.
TVS Rabupura - Showroom & Service Center
085951 21875#vsjupiter #tvs #tvsapache #tvsntorq #apache #tvsmotorcompany #ntorq #v #tvsracing #tvsxl #india #scooter #jupiter #tvsradeon #rtr #apachertr pic.twitter.com/pzHJ4wX8MI
புதிய அப்டேட்களுடன் TVS Sport Bike
சமீபத்திய தகவல்களின்படி, புதிய அப்டேட்களுடன் கூடிய 2025 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் (2025 TVS Sport Bike) வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர உள்ளது.
இந்த பைக் இ.எஸ் (ES - Electric Start) மற்றும் இ.எல்.எஸ் (ELS - Electric Start with Alloy Wheels) என இரண்டு விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இவற்றின் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலை ₹59,881 முதல் ₹71,785 வரை உள்ளது. இந்த இரண்டு வேரியண்ட்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு அவற்றின் கிராஃபிக்ஸ் வடிவமைப்புகள்தான்.
இந்த கிராஃபிக்ஸ் டிசைன்களையே 2025 மாடலில் டிவிஎஸ் நிறுவனம் புதுப்பிக்க உள்ளது. புதிய ஸ்போர்ட் பைக்கின் பெட்ரோல் டேங்க் (Fuel Tank), பக்கவாட்டு பேனல்கள் (Side Panels) மற்றும் ஹெட்லைட் கௌல் (Headlight Cowl) ஆகிய பகுதிகளில் கிராஃபிக்ஸ் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கில் 109.7சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் (109.7cc Single-Cylinder Engine) பொருத்தப்பட்டுள்ளது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 7,350 ஆர்பிஎம்-இல் 8.08 பிஎச்பி (BHP) பவரையும், 4,500 ஆர்பிஎம்-இல் 8.7 என்.எம் (Nm) டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த எஞ்சினுடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் (4-Speed Gearbox) இணைக்கப்பட்டுள்ளது.
The #TVS #Sport is a commuter motorcycle for customers looking for a light-weight ride with a frugal engine and an affordable price tag. It is available in 2 variants and 8 colours. Take a look at this picture to know about all the colour options.
— BikeWale (@BikeWale) September 24, 2024
#tvsport #bwsnippet #bikes pic.twitter.com/YYebc9Bv8m
பாதுகாப்பு அம்சமாக, இந்த பைக்கின் இரு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் (Drum Brakes) வழங்கப்படுகின்றன. டிஸ்க் பிரேக் (Disc Brake) ஆப்ஷன் இதில் வழங்கப்படவில்லை.
சஸ்பென்ஷனுக்காக முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் (Telescopic Forks) மற்றும் பின்பக்கத்தில் ஐந்து நிலைகளில் அட்ஜெஸ் செய்யக்கூடிய ட்வின் ஷாக் அப்சார்பர்கள் (Twin Shock Absorbers) கொடுக்கப்பட்டுள்ளன.
டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் அலாய் சக்கரங்களில் ட்யூப்லெஸ் டயர்கள் (Tubeless Tyres) பொருத்தப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |