அடித்தால் சிக்ஸர் மட்டும் தான்! வாணவேடிக்கை காட்டிய வீரர்
- ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் 53 ஓட்டங்கள் விளாசி ஆட்டநாயகன் விருது பெற்றார்
-
அயர்லாந்துக்கு எதிராக பாசல்ஹக் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி பெல்பாஸ்ட்டில் நடந்தது.
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் ஸஸாய் 39 (40) ஓட்டங்களும், குர்பாஸ் 53 (35) ஓட்டங்களும் விரட்டினர்.
முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய இப்ராஹிம் 22 பந்துகளில் 36 ஓட்டங்கள் விளாசினார். கடைசி கட்டத்தில் களத்தில் நின்ற நஜிபுல்லா சிக்ஸர்களை பறக்கவிட்டார். ஒரு பவுண்டரி கூட விரட்டாத அவர், மொத்தம் 5 சிக்ஸர்களை அடித்து வாணவேடிக்கை காட்டினார்.
PC: Twitter
PC: Twitter
இதன்மூலம் அவர் 18 பந்துகளில் 42 ஓட்டங்கள் குவித்தார். அயர்லாந்து தரப்பில் ஜோ லிட்டில் 2 விக்கெட்டுகளையும், அடையர் மற்றும் பியோன் தலா விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களே எடுக்க முடிந்ததால், ஆப்கானிஸ்தான் அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் டாக்கரெல் 37 பந்துகளில் 58 ஓட்டங்களும், பியோன் 18 பந்துகளில் 36 ஓட்டங்களும் எடுத்தனர்.
PC: Twitter
ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த டி20 போட்டி 15ஆம் திகதி நடக்க உள்ளது.
PC: Twitter