அறிமுக டெஸ்டிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய வீரர்
ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நிஜத் மசூட் அறிமுக டெஸ்டில் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
நஜ்முல் ஷாண்டோ 146
வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது. தொடக்க வீரர் ஹசன் ஹோய் 76 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, சதம் விளாசிய நஜ்முல் ஷாண்டோ 146 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
Cricfrenzy
அனுபவ வீரர் முஷ்டபிசுர் ரஹிமை 47 ஓட்டங்களில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் நிஜத் மசூட் வெளியேற்றினார்.
அறிமுக டெஸ்டில் 5 விக்கெட்
அதன் பின்னர் கடைசி இரண்டு விக்கெட்டுகளையும் அவரே கைப்பற்றினார். இதனால் வங்கதேசம் 382 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. நிஜத் மசூட் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதன்மூலம் இந்த சாதனையை செய்த இரண்டாவது ஆப்கான் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். முன்னதாக, 2019ஆம் ஆண்டில் அமிர் ஹம்சா தனது முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.
FIVE WICKETS on Debut! ️💥
— Afghanistan Cricket Board (@ACBofficials) June 15, 2023
Sensational bowling from Nijat Masoud as he gets a 5️⃣-wicket haul for Afghanistan in his debut Test Match. 👏
Well done on an incredible bowling performance! 👏#AfghanAtalan | #BANvAFG2023 | #XBull pic.twitter.com/iH8Q5b3cFQ
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |