11 ஓவரில் 132 ஓட்டங்கள்! அடித்து நொறுக்கிய ஆப்கன்
ரஷித் கான் 10 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்ததுடன், இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்
இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 2-2 என தொடரை சமன் செய்துள்ளது
அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பெல்பாஸ்டில் அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டி நடந்தது. மழை தொடர்ந்து பெய்ததால் நாணய சுழற்சிக்கு தாமதமானது.
பின்னர் அணிக்கு 11 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்டது. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 11 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்கள் குவித்தது.
PC: ACBofficials
PC: Google
அதிகபட்சமாக நஜுபுல்லா 50 ஓட்டங்களும், ரஷித் கான் 31 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய அயர்லாந்து அணி அதிரடியாக விளையாடினாலும், விக்கெட்டுகளை கடைசி கட்டத்தில் பறிகொடுத்ததால் 11 ஓவர்களில் 105 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜார்ஜ் டாக்ரெல் 41 ஓட்டங்களும், ஸ்டிர்லிங் 20 ஓட்டங்களும் எடுத்தனர்.
PC: Sportsfile
ஆப்கானிஸ்தான் தரப்பில் பாரீத் அஹ்மத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி 17ஆம் திகதி நடைபெற உள்ளது.
PC: Twitter