33 பந்தில் அரைசதம் விளாசல்! பலம் வாய்ந்த இங்கிலாந்தை அடித்து நொறுக்கிய ஆப்கான் வீரர்
ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
மிரட்டும் ஆப்கானின் தொடக்கம்
டெல்லியில் உலகக்கோப்பையின் 13வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
Twitter (@ACBofficials)
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்தது. வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து இமாலய வெற்றி பெற்றது.
இதனால் பலம் வாய்ந்த இங்கிலாந்தின் பந்துவீச்சை ஆப்கானிஸ்தான் சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்தது.
Twitter (@ACBofficials)
குர்பாஸ் அதிவேக அரைசதம்
ஆனால் ஆப்கான் அணியின் தொடக்க வீரர் குர்பாஸ் கணிப்புகளை தவிடு பொடியாக்கினார். ருத்ர தாண்டவம் ஆடிய அவர் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இதன்மூலம் உலககோப்பையில் 50 ஓட்டங்களை கடந்த மூன்றாவது ஆப்கான் வீரர் என்ற பெருமையை குர்பாஸ் பெற்றார்.
Twitter (@ACBofficials)
மேலும் ஆப்கானிஸ்தான் அணி பவர்பிளேயில் 79 ஓட்டங்கள் விளாசியது. இது உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
Twitter (@ACBofficials)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |