தகர்ந்தது ஆப்கான் அணியின் உலகக்கோப்பை கனவு! தென் ஆப்பிரிக்காவிடம் போராடி தோல்வி
உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் போராடி தோல்வி அடைந்தது.
அஸ்மதுல்லா ஓமர்சாய்
அகமதாபாத்தில் நடந்த 42வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 244 ஓட்டங்கள் எடுத்தது. அஸ்மதுல்லா ஓமர்சாய் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 97 (107) ஓட்டங்கள் விளாசினார்.
சிறப்பாக பந்துவீசிய கோட்ஸி 4 விக்கெட்டுகளும், மஹாராஜ் மற்றும் இங்கிடி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் பவுமா 23 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆக, டி காக் 41 ஓட்டங்களில் இருந்தபோது நபி ஓவரில் ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்கா வெற்றி
பின்னர் வந்த மார்க்ரம் 25 ஓட்டங்களிலும், கிளாசென் 10 ஓட்டங்களிலும் வெளியேறினர். எனினும் வான் டர் டுசன் மற்றும் பெலுக்வாயோ இருவரும் ஆட்டமிழக்காமல் 48வது ஓவரில் வெற்றியை நிலைநாட்டினர்.
ஆப்கானிஸ்தான் அணியினர் போட்டியை 48வது ஓவர் வரை கொண்டுவந்து தென் ஆப்பிரிக்காவுக்கு பயத்தை காட்டினர்.
எனினும், தோல்வியால் ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பையை விட்டு வெளியேறியது. 76 ஓட்டங்கள் எடுத்த வான் டர் டுசன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
VIJAY SONEJI
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |